உயிரோடு இருந்தமட்டில் தன்னை பெற்றவர்களிடம் அன்பு காட்ட முடியாதவர்கள் அவர்கள் மறைந்த பின் உலகத்திற்காக நாடகமாடுவது அதிகமாகி வருகிறது. மறைந்த பெற்றோருக்கு காசி போன்ற இடங்களுக்கு போய்செய்து விட்டுவருவதை இந்த நாட்களில் அதிகமாக பார்க்கிறோம். பெற்றோர் உயிருடன் இருக்கும்போது மகிழ்ச்சியை தரமுடியாத பிள்ளையோ பெண்ணோ அவர்கள் மறைந்தபின் அவர்களை சமாதானம் பண்ணமுயல்வதுமாதிரி தங்கள் பயத்தை அனுபவிக்கின்றனர்.
இன்னாரின்பிள்ளையோ பெண்ணோபெற்றோரின் அந்திம சடங்கிற்கு அள்ளி வீசினான் என்று பெயர்எடுக்க. இனிய சொற்களை வீசி பெற்றோரை வயதான காலத்தில் கவனிக்காமல் விட்ட பாவங்கள் துரத்திக்கொண்டே தான் வரும் என்பதில் சந்தேகமேயில்லை.
Leave A Comment