நமக்கு வயதாகும் வருகின்ற போது, நாம் பிறந்ததிலிருந்து நம்முடனேயே வளர்ந்த அங்கங்கள்,நம் ஆர்டர்களை ஏற்றுக்கொள்ளாமல் அலட்சியம் செய்கிறது.உதாரணமாக கண்கள் பார்ப்பதற்கு தடுமாறுகிறது,
கண்ணாடியை தேடுகிறது,காதுகள் கேட்க மறுக்கிறது,வயிறு சீரணிக்கமாட்டேன்கிறது. ஆக கூடி எதுவுமே நம் கண்ட்ரோலில் இல்லை.நாம் பழக்கிவந்த அங்கங்கள் நம்மை அவமானப்படுத்துகின்றன.அதை நாம் அவமானமாக கருதவில்லை.ஆனால் நம்மிலிருந்து உருவாகிய பிள்ளைகுட்டிகளுடன் ஒத்துக்கொள்ளாவிட்டால் அதை பெரிய அவமானமாக கருதுகிறோம்.ஏன் அப்படி.. மருமகளோ,மருமகனோ
வேறு வீட்டில் வளர்ந்தவர்களிடம் நமக்கு ஒத்து வருவது இல்லை.
நம்முடன் ஒத்துழைக்காமல் இருக்கும் சரீரத்திற்கு வேண்டிய மாதிரி வாழ்க்கையை அமைத்துக்கொள்வது போல ஏன் மனிதர்களுடன் ஒற்றுப்போவது இல்லை .
Leave A Comment