அம்மா  என்பவள்   நமக்கு  உயிரை  தந்தவள், உடலையும்  தந்தவள். இதை  படிக்கும் போது  நமக்கு ஆண்டவன்தான் எல்லாவற்றையும் தந்திருக்கிறார். இதில் என்ன சண்டை என்று தோன்றுவது இயற்கையே.

அதனால்  பெற்றோர்  நமக்காக பண்ணியதியாகங்கள் தெரிவதில்லை. நமக்காக செய்ய முடியாதவைகள் நம் நினைவுகள் மனதில் நிழலாடி நம் மனதை அலைக்கழித்துக்கொ ண்டேயிருப்பதால்தான் நம் மனதிலே சஞ்சலம் குடி கொண்டு ஆட்டிப்படைக்கிறது.

அதனுடைய எதிரொலிதான் என் வாழ்க்கையில் நான் எதுவும் சாதிக்க முடியாமல் போனேன் என்று புலம்புக்கிறார்கள். ஆனால் அவரவர் ஏமாற்றத்தையும் மறைத்துக்கொள்ளவும் தெரியாமல்த விக்கிறார்கள். அதை வடித்துக்கொள்ள வழி புரியாமல் வீட்டில் உள்ள பலகீனமானவர்களிடம் காட்டவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.

சிலவற்றை நம்புகிறோம், சிலவற்றை மறக்க அல்லது மறைக்க முயல்கிறோம். கடினமான வேலைதான்.

கல்யாணமான புதிதில் இளம் மனைவியின் மவுசு தனியாகத்தான்  தெரியும். அதற்கு பெற்றோரை பலி கொடுக்க தயாராகி விடக்கூடாது. ஆனால் என்ன செய்யமுடியும். தெரிந்தோ தெரியாமலோ பலபேர்வழிகள்.

பெற்றவர்களை அலட்சியமாகவே நடத்துகிறார்கள். பழகப்பழகத்தான் அதைப்பற்றி  சிந்திக்கும் மனப்பான்மை வரும், காலம்  எதற்காகவும் காத்திராமல் கடந்து விடும்.

இதை யாருடைய குற்றமாக நினைப்பது. காலத்தின் கோளாறு தான் என்று ஒதுக்கி விட்டவர்கள் மனதை தேற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் அடுத்து வரும் விளைவுகளை சந்திக்க தயாராகி விட வேண்டியதை தவிர வேறு வழியேயில்லை.

சில குடும்பங்களில் நாம் பார்ப்பது என்னவென்றால் பெரியவர்களும் கடந்துபோன சமாசாரங்களை உடைந்து போன ரெகார்ட் மாதிரி குற்றம் குறைகளையே மாற்றி மாற்றி பேசிக்கொண்டே மனதை நோகவும் அடித்து விடுகிறார்கள். வாழ்க்கையின் மதிப்பிற்கு அளவுகோளே இல்லாமல் போய் விடுகிறது. இதற்குள் பிள்ளையும் மனது நொந்துபோய் உட்கார்ந்து போய் விட்டிருப்பான்.

இதை யாருடைய குற்றமாக சொல்வது? காலத்தின் மேல் போட்டு விட்டால் கவலையற்று இருக்கலாம், இல்லாவிடில் அடுத்துவரும் விளைவுகளை சந்திக்க தயாராக வேண்டிய  கட்டாயம் ஏற்பட்டு கதவின் நடுவில் மாட்டிக்கொண்டு விட்டஎலி மாதிரி ஆகி விடுகிறோம்.