எங்கள் தம்பி அண்ணா, ஒரு ஷ்பெஷல் அண்ணாதான் என்பதில் பெருமைப் படுகிறேன். 25 வயதில் சிடுசிடுப்பான அண்ணா, 35 வயதில் வெடு,வெடு அண்ணா, 45 வயதில் குணமாறுதல்கள் அவர் ஆரம்பித்த சமயம், 60 வயதில் சற்குண அண்ணாவாகி விட்டாரே, 70 வயது அண்ணா பொறுமையின் சிகரம், தாயாரைப்போல ஆதரவு தரும் அண்ணா இது என்னமாதிரி மாற்றம்!!

70+அண்ணா தன் குழந்தையாக நம்மை பாவிக்கிறானே, இது எப்படி?

இந்தண்ணாவைப் பற்றி என்ன சொல்லட்டும், என்று தடுமாறுகிறேன் சொல்லப்போனால் எங்கள்அண்ணா ஒரு பள்ளிக்கூடமாகி விட்டார் பேச்சு குறைவாகத்தானிருக்கும், ஆனால் கார்யாகாரியங்களில் குறைந்த பேச்சில் எத்தனை அனுகூலம் காட்டுகிறார்.

கணக்காகசெய்வதில் மன்னன்தான் எங்கள் தம்பிஅண்ணா! அவர் வீட்டுக்கு நாம் வரப்போகும் சேதி, கேட்டதும் நாம் எங்கேயிருந்து, எப்படி, எப்போது வருவோம் அவர் வீட்டிற்கு, என்று கேட்கும் அனுகூலத்தை  எப்படி விவரிப்பேன்! வீட்டிற்கு வந்தவுடன் வாங்கோ,வாங்கோ என்று  வாய் நிறையஅழைப்பார். சாமான்களை தூக்க வருவார். எங்கள் தம்பி அண்ணா ஒரு பள்ளிக்கூடம் மாதிரி என்று, அது ஏன் தெரியுமா – கண்ணியம், கட்டுபாடு, கண்டிப்பு, அன்பு அனுகூலம் எல்லாவற்றிற்கும் உதாரணம் எங்கள் தம்பி  என்ற அண்ணாதான். பிறந்த வீட்டுப்பெருமையை உடன்பிற்ந்தவர்களுடன் பீற்றிக் கொண்டாள் என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் சின்ன வயதிலிருந்தே எனக்கு எங்கள் தம்பி அண்ணாவைப் பற்றி எழுத ஆசையிருந்தது.  இப்போதுதான் நிறைவேறியிருக்கிறது.அறிஞர் அண்ணா, தலைவர் அண்ணா,கதாகாலட்சேப அண்ணா, கதாசிரியர் அண்ணா மாதிரி எங்கள் தம்பிஅண்ணாவும் ஸ்பெஷல் என்பதில் பெருமைப்படுகிறேன்.