ஆண்டவனின் படைப்பில்தான் குற்றமாகி விட்டது , என்று கூறுமளவுக்கு மனித இனத்திற்கு சக்தி பிறந்து விட்டாற் போல் பேசுகிறார்கள். ஆண்டவன் மனிதனின் எண்ணத்தை கேட்டு கொள்ளாமலே அவனை படைத்ததாலே வந்த வினை இது என மனிதர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். இப்போதைய நிலையில் நினைத்துப்பார்த்தால், மனிதர்களுக்கும் மஹாவிஷ்ணு மாதிரி நான்கு கைகள், நான்கு கால்களை படைத்திருந்தால் பிறருக்கு கிடைப்பவைகளையும் தானே எத்தனை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு காலத்தை கடத்திக்கொண்டிருந்திருப்பார்களோ என நினைக்க வைக்கிறது. மனித மனத்திற்கு எதிலுமே பரிபூர்ண திருப்தி எக்காலத்திலும் ஏற்பட்டதில்லையோ என தோன்றுகிறது. எதையும் நாம் அவன் காட்டிய வழியில் நடப்பதில்லை. ஆனால் குற்றம் சொல்வதில் மேன்மையானவர்களாகவே திகழ்கிறோம். தனக்கு கிடைத்திருக்கும் பதவியையோ, ஐஸ்வர்யத்தையோ பாதுகாத்து வாழ்க்கையை ஓட்டத்தெரியாமல் , பிறருக்கு உள்ள அந்த பதவி, அத்தனை பணம் தனக்கு கிடைக்கவில்லையே என நினைத்து ஏங்க ஆரம்பித்து பரிதவிக்கிறார்களே? இம்மாதிரியான மனிதர்களுக்கு எங்கே கிடைக்கும் பரிபூர்ண திருப்தி? அவர்களை படைத்த அதே ஆண்டவன் வந்து விவரமாக சொல்ல முடியுமா?
Leave A Comment