இன்றையநாட்களில் சின்னஞ்சிறு பிள்ளைகளிலிருந்து பெரியவர்கள் வரை மனித மனம் மாறி கொண்டே வருகிறது . எவருக்குமே யாருடைய பேரிலும் எந்தவிதமான அக்கறையும் இருந்திருந்தாலும் , தற்போது மாறி வருகிறது . அவரவர் சம்பாத்தியம், வாழ்க்கையை பற்றியேதான் கவலையே தவிர வேறெதுவுமே எண்ணங்கள் எழுவதில்லை என்றே நினைக்க வைக்கிறது. பிள்ளைகளுக்கும் உறவினர்கள் கூட்டம் பிடிக்காமல் போய்விட்டது. எந்த விசேஷமான தினமாக இருந்தாலும் உறவினர் வீட்டில் தங்கியிருக்க பிடிப்பதில்லை . இப்போதெல்லாம் வேறு வீட்டு கல்யாணங்களுக்கு போவதென்றால் பிள்ளைகளுக்கு பிடிப்பதில்லை . அவரவர் சௌகர்யத்தை குறைத்து கொள்ள முடிவதில்லை. பிற குடும்பங்களுடன் ஒத்துக்கொண்டு போவது என்பது முடியாத ஒன்றாகவே உள்ளது. நமக்கு வேண்டிய அத்யாவசியமான எல்லாவிதமான சௌகர்யங்களும் எப்போதுமே வேண்டுமானாலும் கிடைப்பதரிது. அதை யாருமே புரிந்து கொள்வதில்லை. யாருமே யாரையும் சார்ந்திருக்கவும் விருப்பமுமில்லை. குடும்பத்தில் யாருடைய விருப்பத்திற்கும் விரோதமாக எதையாவது பிளான் செய்தோமானால் குடும்பதலைவியின் பாடு திண்டாட்டம்தான்.
அதுவும் எங்கள் தலைமுறையில் பிள்ளைகள் வளர்த்தியதற்கும் இப்போதைய பெற்றோர்கள் பிள்ளைகளை பார்த்து ,பார்த்து வளர்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. பெற்றோர்களே பிள்ளையின் முகம் கோணாமல் இருக்க மஹா பாடுபடுகிறார்கள் என்று பார்த்தமட்டிலேயே தெரிகிறது.
Leave A Comment