குரங்கினுடைய சேஷ்டைகளை பார்க்கும்போதுதான் புரிய வரும், குரங்கின் மனதையடைந்த மனிதன் எத்தனை சஞ்சலமாக இருப்பினும் தன் கண்ட்ரோலில் இருக்கிறான் என்பது.
குரங்கு ஒருமரக்கிளையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போதே வேறு யாரெல்லாம் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் கையில் என்ன உள்ளது, அதை அவர்கள் எவ்வளவு கவனமாக பிடித்துக்கொண்டு இருக்கிறார்களா என்று அதன் மனதில் ஓடிக்கொண்டேயிருக்கும். அந்த ஆள் எப்போது ஏமாறப்போகிறான் என்பதையே அது யோசித்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருக்கும். சான்ஸ் கிடைக்கும்போது பாய்ந்துவந்து லபக்’என்று பிடுங்கிக்கொள்ளலாம் என்றே காத்துக்
கொண்டிருக்கும். சமயம் கிடைக்குமா பறித்துக்கொள்ள என்றேதான் நினைக்கும். குரங்கு தன் இலக்கிலேயேதான் குறி வைத்துக்கொண்டிருக்கும்.
குரங்கின் மனதையடந்த மனிதனும் இப்படியேதான் நடந்துகொள்வான்.குரங்கின் நடவடிக்கைகள் அத்தனையும் அவனிடமும் காணப்படும். தன்கையில்இருக்கும் அமிர்தத்தை விட அடுத்தவர்கள் கையில் விஷமிருந்தாலும் அவனுக்கு அதுதான் வேண்டும். அடுத்தவனோட சந்தோஷத்தை அவனால் தாங்கி கொள்ள முடியாது. அடுத்தவனுடைய தனியுரிமையை பறித்து விடுவார்கள்.அடுத்தவனுடன் ஆசையாகப்பேசி விஷயங்களை அவனிடமிருந்து கறந்து அவனை எப்படி கவிழ்க்கலாமென்ற நோக்கத்துடனேயே காலத்தை ஓட்டப்பார்ப்பார்கள். ஆனால் வரும் சமயத்தை நன்றாக உபயோகித்துக்கொண்டு, குரங்கு மாதிரியே பிடுங்கிக்கொள்ளும் நாளை எதிர்நோக்கி காத்திருப்பார்கள். பிடுங்கியும் விடுவார்கள். பிறர் சங்கடங்களை நன்றாக அனுபவித்தும் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.