ஒரு காலகட்டத்தில் மேல் நாட்டு மக்களின் கல்யாணங்களை பற்றி கிண்டலாக பேசிய நாம், இன்றைய நாளில் இந்தியாவிலேயே உயர்குடிமக்கள் என கருதப்பட்ட சமூகத்தில் விவாக முறிவுகள் சர்வசாதாரணமாகி விட்டதை பார்க்கிறோம். பணத்திற்கு மட்டுமே அடிமையாகிவிட்ட உயர்குடி மக்கள், நம் நாட்டு சில பெற்றோர்கள் பெண்கள் வேலைசெய்து பணம் கொடுக்கும் பணம் போதாமல் பெண்களை வாழ விடாமல் செய்து பிள்ளை வீட்டாரிடமிருந்து பணம்கறக்கும் கலையை தெரிந்துகொண்டு தன் பெண்களுக்கே சாதகமாக பேசுவதுபோல், பேசி பெண்ணின் மனதை கலைத்து மணமுறிப்பை உண்டாக்கி விடுவது போன்ற தோற்றம் வந்துள்ளது. பெற்றோர்களே பெண்களுக்கு அபாரமான நம்பிக்கையை உண்டாக்கி பெண்களுக்கே சாதகமான சூழ்நிலையை கொடுப்பதாக ஒரு நம்பிக்கையை தோற்றுவித்து பெண்களை பலி கொடுத்து பணம் ஈட்டுகிறார்கள் என்றேதான் நினைக்கத்தோன்றுகிறது. இதுதான் வேலியே பயிரை மேய்கிறது என்பதற்கு ஒரு அத்தாட்சி. பெண்களும் தாங்கள் பெற்றோருக்காக ஒரு மகத்தான உதவி செய்வதாக நினைத்து தங்களை பலிகொடுக்கிறார்கள். பெற்றோர்களும் மனிதர்களேதான் என்பதை நாளடைவில் புரிந்து கொள்வார்கள். இதேமாதிரி சந்தர்பங்களில் புகுந்த வீட்டிற்காக செய்ய எந்த நாளிலும் யோசித்துதான் முடிவெடுப்பார்கள்.
பெண்களும் தங்கள் வாழ்நாளை வேறு எந்த வீட்டாருக்காகவும் பலியிட தயாராக இல்லை என்பது போல் நினைத்தும் பேசியும் கல்யாணத்தை முறித்துக்கொள்வதில் தேர்ந்தவர்களாகி வருகிறார்கள் என்பது வருந்தத்தக்க விஷயமேயாகும். பெண்களுக்கே உரித்தான பெண்மை போய் ஒரு அசுரத்தனம் அவர்கள் மனதில் புகுந்து விட்டது. எந்த மாதிரியான விபரங்களையும் இரு சாராருமே தயங்காமல் பலர் முன்னிலையில் பேசும் திறமையும் வந்து விட்டது. பையனும், பெண்ணும் தன் மன இறுக்கத்தை மனதில் வைத்துக்கொண்டு குமுறி,பைத்தியம் பிடிக்குமளவுக்கு வந்து விடுவதையும் பார்க்கிறோம். இனிமேல் அக்னி பகவானை பிரமாணமாக வைத்துக்கொண்டு கல்யாணங்களை நடத்துவதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை. கல்யாணங்களை ஆண்டவன் முன்னிலையில் செய்விப்பதை நிறுத்தி விட வேண்டும். ஆண்டவனுக்கும் என்ன செய்வதென்று புரியாது முழித்துக்கொண்டு நிற்பது போல்தான் தெரிகிறது. ஆண்டவனே செயலிழந்துவிடும் அளவுக்கு வந்துவிட்டான். ஆண்டவன், பெற்றோர், பெரியவர்களின் ஆசிகளை பெறுவது எதுவுமே இனி அவசியமில்லை கல்யாண சமயத்தில். ஒவ்வொரு வருடமும்
எங்கள் கல்யாணம் கலையவில்லை என்று FBயில் போட்டுவிடலாம். குறைந்த பட்சம் இந்த கல்யாண ஷோவையாவது குறைக்கப்பார்க்கலாம். ஊரைக்கூட்டி அமர்க்களம் செய்யாமல் இருக்கலாம். இருமிய சமயம் கட்டிய தாலி தும்மினபோது அறுந்துவிட்ட மாதிரி என்ற பழமொழி கேட்ட மாதிரி நடத்திக்காட்டுகிறார்களே.
கற்காலம்,பொற்காலம், என்பது போல் கட்டியதாலியை உடனுக்குடன் அறுத்து எறியும் காலம் வந்துவிட்டது.
Leave A Comment