அந்த நாளில் வயதானவர்கள் கலிகாலம் முற்றிவிட்டதால் நிறைய பாவகார்யங்கள் நடப்பதாக சொல்லிக்கொண்டிருப்பார்கள். மனிதர்களுக்கு மனதில் போதும்என்ற எண்ணமே வருவது கிடையாது. எது எப்படியாக இருந்தாலும் சரி தனக்கு வேண்டுமென்பது கிடைத்து ஆகவேண்டுமென்பதில் மனித மனம் பிடிவாதமாக இருக்கிறபடியால் நிறைய பூசல்கள் வந்து விடுகின்றன. இதற்கு காலம்என்ன செய்யும்?

இன்றைய நாட்களில் பலாத்காரம் நிறைய நடந்து வருகின்றன. பலாத்காரம் நடப்பதற்கு எந்த தூண்டுதல்களும் வேண்டிய அவசியமில்லை. மனிதன் மிருகமாகி விட்டால் அவன் தன்னிச்சையாக எது வேண்டுமானாலும் செய்யலாம், அதை யாரும் கேள்வி கேட்க அவசியமில்லை என்றும் கருதுவதால் வந்த வினை.அவனவனுக்கே யோசித்துப்பார்க்கும் சக்தியோ, பக்குவமோ இல்லை. மேலும் எது செய்தாலும் தப்பித்து விடலாமென்ற தைர்யமும் உள்ளது. எந்த சூழ்நிலையிலும் தப்பு செய்தால் மன்னிக்கபடமாட்டோம், மற்றும் தண்டனையிலிருந்து தப்பிக்கவே வழிகிடையாது என தெரிந்தால் மனம் துணியுமா ?

மேலும் தன்அம்மாவையோ, பிள்ளைகளையோ, சகோதர சகோதரிகளையோ , இம்மாதிரியான செய்வோமா என்று நினைத்துப்பார்க்கும் சக்தியை இழந்து அதல பாதாளத்திற்குள் போய் விழுந்து விடுகிறான். அந்தமாதிரி ஈன செயலில் ஒருமுறை ஈடுபட்டுவிட்டானானால் தன்மானத்தை இழந்து சுய மனத்தையும் இழந்து நிற்கிறான். தவறு என்பதே ஒருமுறை செய்யும்போதுதான் மனம் கலங்கும்.

மனோ பலத்தை இழந்து  சரீர வெறிக்கு அடிமையாகி விட்ட மனிதனுக்கு எதை கேட்டால் ஞானம் வரும்? தன்மானத்தை இழந்துவிட்ட மிருகத்திற்கு நல்லவார்த்தைகள் காதில் ஏறுமா? எவனொருவன் இந்த நீச்ச வேலையை செய்து தன்சுய கம்பீரத்தை இழந்துவிட்ட அவன்  ஆண்மையின் பலவீனத்திற்கும் அவனே பலியாகி விட்டானே! இன்றைய மனிதனின் நிலை பரிதாபத்திற்குரியதாகி விட்டதே!

வேலியே பயிரை மேய்ந்து விட ஆரம்பித்துள்ளது.