வாழ்வே கதையாகி விட்டதே, வளர்ந்த  நாட்கள் பொய்த்து விட்டதே,

இன்றுமட்டுமேதான் நினைவிருக்கிறது, நேற்று என்பது  பொய்த்துவிட்டதே,

நாளை என்று ஒன்று இருப்பதாக தெரியவில்லையே!

ஒருகாலத்தில் எக்களித்து துள்ளிக்குதித்த அதே உடலா இது?

அந்த துள்ளலும் குதியாட்டமும் எங்கே போயிற்று?

அதே உடல், அதே மனம்தான், இது கனவுலகமா?

உணர்வேயில்லாது  பேசுகிறேனே, எதுவுமே மனதிற்கு பிடிக்கவில்லையே!

இப்போது புரிகிறது கடைசி டிக்கட் ரிஸர்வு செய்யும் கியூவில் நிற்கிறேன்,

எப்போது கவுண்டர் திறக்கும் என காத்துக்கொண்டிருக்கிறேன்.

என்னை யார்வந்து அழைத்துப்போக போகிறார்கள் ?

ஏறிய இடம் எது என்று மறந்துவிட்டது, இறங்குமிடம் தெரியாது.

எங்கே போவேனோ எனக்கும் தெரியாது. எல்லோருக்கும்  முடிவு காலம்

என்று வரும்போது இப்படித்தான் இருப்பார்களோ?