நகை வேண்டாம்,  புன்னகை போதுமே,

நகை போட்டால் உயிருக்கே ஆபத்து, புன்னகையை சுற்றி சுற்றி கூட்டம்,

நகை அணிந்தால், பார்ப்போர் கண்களில் வயிற்றெரிச்சல்,

நகையே, நகையே என நீ அதைப்பார்த்து இளித்தாலும் ,

உனக்கு கிடைக்கப்போவதென்னவோ ஒன்றுமில்லை,

ஆனால்  உன் உன்னதமான புன்னகையில் புளகாங்கிதம்,

புன்னகையை கொண்டே, காலத்தை சீராக கடத்தலாம்,

மனங்களை வெல்லலாம், ஆனால் காலன் வரும்போது ,

அவனை வென்று உயிரோடிருக்க முடியாது. நமக்கு எது வேண்டுமென்று ,

கேட்டாலும் ஆண்டவன் தரமாட்டான் , நம் யோக்யதைக்கேற்ப போடுவான் அவன் பிச்சை ,

ஏற்றுக்கொண்டாயோ இல்லையோ அவனுக்கு லட்சியமில்லை,

இடப்பட்டதை ஏற்றுக்கொள், மறுத்தாயானால் இதுவும் நழுவி போய்விடும்.

உனக்கென்று வாழ்வை கொடுத்தவனுக்கு நன்றியுடன் இரு.

அது போதும் அவனுக்கும் உனக்கும் !!