மனிதர்களை விட மிருகங்களுக்கு தன்னை வளர்த்தவர்களிடம் அன்பிருக்கும், என சொல்லிக் கேட்டிருக்கிறோம். இதற்கு உதாரணம் காட்டுவது போல் , சுமார் 55 வருடங்கள் முன்பு நடந்த கதையானாலும் என்னால் மறக்க முடியாத ஒன்று.
கிராமத்தில் நாங்கள் இளம்பிள்ளைகளாக வளர்ந்து வரும்போது நடந்த சம்பவம் இது. அப்பா வாசல் திண்ணையில் படுத்துதூங்கிக்கொண்டிருக்கும் சமயம், அப்பாவிற்கு வயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்பட்டு வெகு நேரம் வரை அப்பாஉள்ளே இருப்பவர்களை எழுப்பார்த்திருக்கிறார். அப்பா படுத்து தூங்கிய இடம், வாசலில் திண்ணை. கிராமத்தில் இரவு வேளைகள் நிசப்தமாகவும் இருக்கும். நாங்கள்படுத்து தூங்கிய இடம் வீட்டிற்குள் சுமார் பத்து மீட்டர் தூரமாகத்தான் இருந்திருக்கும். நடுவில் ஒரு ரூம் உள்ளது. அப்பா சத்தம் கொடுத்தபோதிலும் எங்களுக்கு கேட்கவில்லை. கேட்டாலும் யாரும் வெளியில் போகும் தைர்யசாலிகளும் இல்லை.
வீட்டினுள்ளே,பிளாக்கி என்ற நாய் படுத்து தூங்கி கொண்டிருந்தது. நாங்களும் 10, பேர்வழிகள் தூங்கிக்கொண்டிருந்தோம். எங்கள் வீட்டில் அன்றைக்கெல்லாம் எலக்ட்ரிசிடி கனெக்ஷன் இருந்திருக்கவில்லை. இரவு ஒரு மணிசுமாருக்கு பிளாக்கி குறைக்கிறது முற்றத்தில், வாசலில் ஒரு பசு மாடு கத்துகிற சத்தம் கேட்டு , பிள்ளைகளாகிய நாங்கள் மூச்சைக்கூட விட பயந்துகொண்டு போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு தூங்குவது போல் பாவனை செய்து கொண்டிருந்தோம். இதயத்தின் துடிப்பு டப்,டப்பென்று இதயமே வெடித்து விடுகிறார் போல் கேட்கிறது.
பெரிய வீட்டுக்குள்அம்மா, பாட்டியம்மாஇருவரும் ஐந்தாறு பிள்ளைகளுடன், வீட்டுக்கூடத்தில் படுத்து தூங்கும் எல்லோரும் மூச்சுக்காற்றைக்கூட இழுத்துவிட பயந்துகொண்டு கதி கலங்கி அசையாமல் ஒற்றுமையாக படுத்துக்கிடந்தோம் . அடுத்தடுத்த வீடுகளில் வசித்துவரும் உறவினர் ஒருவர் என்னவோ மாடு கத்துகிறதே என்று எழுந்து வந்து பார்த்தபோதுதான் அப்பா வயிற்று வலியில் துடிப்பதை பார்த்த அவர் எங்கள் வீட்டுக்கதவை தட்டிய போது , எல்லோருமாக அம்மாவுடன் கதவுகளில் போய்நின்று என்னசொல்கிறார் என்று கேட்டு லாந்தர் விளக்கை எடுத்துப்போய் அப்பாவை உள்ளே அழைத்து வந்ததுதான் என் நினைவில் உள்ளது.
ஆதிவாசிகள் போல்தான் சிறிய வயது முடிந்திருந்ததோ, என்று நினைக்கத்தோன்றுகிறது இன்றைக்கு நினைத்துப்பார்த்தால். எங்கள் தகப்பனார் திண்ணையில் தூங்கிகிக்கொண்டிருக்கும்போது வயிற்றுவலியில் துடித்துக்கொண்டிருக்கும் சமயம் அவருடைய புலம்பும் குரல்கேட்டு எங்கள் வீட்டு ஒரு பசுமாடு அதனுடைய கழுத்தில் கட்டியிருந்த கயிற்றை அறுத்துக்கொண்டு வேலியை பிய்த்துப் போட்டுக்கொண்டு வெளியில் நின்று கொண்டு என்அப்பா வலியில் துடிப்பதை பார்த்ததும் எங்களை எழுப்பும் நோக்கத்தில் கத்தியிருக்கிறது.. அக்கம்பக்கத்து வீடுகளில் படுத்துறங்கியவர்கள் எழுந்து வந்து அப்பாவின் உதவிக்காக வந்து அப்பாவிடம் பேசிக்கொண்டிருக்கையில்தான் நாமெல்லோருமாக வெளியில் போய் பார்த்தால் அப்பாவிற்கருகில் மாடு நின்று கொண்டு அப்பாவை தன்னுடைய நாவினால் நக்கி,நக்கி சமாதானம் செய்வது போல் போஸ் கொடுத்துக்கொண்டு நின்ற காட்சி , இன்றைக்கும் கண் முன்னால் நிற்கிறது.
Leave A Comment