வீட்டில் பெற்றோர்கள் காத்திருக்க பிள்ளைகள் சமூக சேவைக்கு போகிறார்கள்,

வீட்டுக் கிழங்கள்  மனம்குமுறி கிடக்க, பிள்ளைகள் ஏழை மகாநாட்டில் பேசுகிறார்கள்,

வீட்டில் கிழங்கள் பட்டினியில் வாட, பிள்ளைகள்  ஏழைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்,

எவர்களுக்கு உதவி தேவையோ அவர்களுக்கு உதவிகொடுக்க , வீடு வீடாக

தெரு,தெருவாக கால்கள் கடுக்க, ஓடியாடி பெயர்களை எழுதி தொகுத்து

அனுப்ப முன்னின்று உதவ ஓடுகிறார்கள், மருந்துகளுக்கு நோயாளிகளின்

பெயர்களை எழுதி, எழுதி பெயர்ந்தே  போய்விடுவார்களோ என எண்ணுமளவுக்கு பிள்ளைகள்  உழைக்கிறார்கள் .

ஆனால் பாவம் வீட்டிற்குள்ளே நுழைந்து பார்க்க பிள்ளைகளுக்கு அவகாசமில்லையே!

நாளை தனக்கும் ஒரு காலம் வந்துவிடும் என்பதையே நினைக்காமலும் ஊராருக்காகவே உருகுகிறார்கள் !!

பிள்ளையாவது, குட்டியாவது என கோபித்தால் என் இச்சையில் நான் பிறக்கவில்லையே!

யார் இருந்தென்ன? யார் போனால் என்ன?  நம் புத்தி நார்மலாக இருக்கும்வரை நாமும் உலகத்தின் இடையூறுகளுடன், அதே வேகத்துடன் ஓடியாட வேண்டுமே!!  ஆண்டவனே மனோசக்தியை கொடு.