நாம் பெற்று வளர்த்த பிள்ளைகள் வேறு, அவரவர் வாழ்வில் வாழும் வாழ்க்கையே வேறு. அவர்கள் வாழ்ந்து வரும் சூழ்நிலைகள் மாறி விட்டபடியால் தங்கள் வாழ்வின் கடந்த காலத்தை அவர்கள் திரும்பி பார்க்க ஆவல் காட்டுவதுமில்லை. இதை யாருடைய துர்பாக்கியம் என்று சொல்வது? தங்களுக்காக, பெற்றவர்கள், எந்த அளவுக்கு தியாகம் செய்திருப்பார்கள் என்று நினைத்துப் பார்க்கவும் புத்தியில் தோன்றுவதுமில்லை, தோன்றினாலும் அதை தன்னைப்பெற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் தெரிவதில்லையா அல்லது தெரியாதவர்கள் மாதிரி நடிக்கின்றார்களா என்றும் புரியவில்லை.
தானாகவே இந்த உலகத்தில் வந்துதித்தாற்போலவும், எப்படியோ தானாகவே முன்னுக்கு வந்து இந்த உச்சநிலையை எட்டி விட்டது போலவும் பேசிக்கேட்டு வருகிறோம்.
ஆனால் அவர்களை பெற்றோர்கள் எத்தனை ஆர்வத்தோடு, மேல்படிப்பற்கோ, பெரிய உத்யோகத்திற்கோ வெவ்வேறு இடங்களுக்கு இல்லை, தேசத்திற்கோ கடனோ, உடனோ பட்டு அனுப்புகிறார்கள். அந்த பெற்றோருடன் சில நல்ல வார்த்தைகளை கூறி மகிழ்விக்ககூடாதா? ஆனால் தனக்கென்று ஜோடி கிடைத்தவுடன் தான் எத்தனை, எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்ததாக காட்டிக்கொள்ள தயங்குவதில்லையே? இவர்களைப் பற்றி எதை சொல்வது?
எதையுமே நினைத்து ஏங்கினால்தானே ஏக்கம் ஏற்படும், இன்றைய நிலையில் யாருக்குமே டயமேயில்லையே, பாவம்! அவர்களை சொல்லிக்குற்றமில்லை. அந்த பெற்றோர் மனதில் விழுந்த அடி, இவர்கள் முதுகில் இல்லை ,மண்டையில் விழும்போது இதைப்படித்தவர்களுக்கு நினைவு வந்தாலும் வரலாம்!
Leave A Comment