காலன் வரும் நேரம் வரட்டும் என்று காத்திருந்தேன், காலமெல்லாம் வீணாக்கிவிட்டேனே, காலன் எனக்காக காத்திருப்பானா? அவனுக்கும் நேரம் ,காலம். எல்லாம் கணித்து. வைத்திருப்பார்களே.
காலன் வரும் நேரத்தில் கண்ணால் கண்டதையும் இல்லையென்றேன், காதால் கேட்டவைகளையும் இல்லவே இல்லையென்றேனே, பயத்தினால். காலமெல்லாம் காத்திருந்தேன் வாழ்க்கையை அநுபவிக்க, போதுமே அனுபவித்தது என எண்ணம் வருவதில்லையே.
நான் எங்கு போனாலும் என் குரங்கு மனம் என்னை விட்டு போகாது. இது யாருடைய குற்றம்? காலன் வந்தவுடன் கேட்டான் , எங்கே போக வேண்டுமென்று, காத்திராமல் பதிலளித்தேன், உன் இடமே என் இடமும் என்று.. வாழ் நாட்களை வீண் அடித்தால், பொறுப்பை யார் ஏற்பார்? யார் சுமந்தவர் என்று தெரியாமல் இருந்த எமனுக்குகூட சங்கோசமாகி தலை குனிந்தான். அவன் டியூட்டியை விட அவனுக்கும் துணிவில்லை.. நானும் காலன் அழைக்க வந்ததும் கிளம்பிவிட்டேன்.
Leave A Comment