நம் வீட்டில்,பெண்ணுக்கோ, இல்லை பையனுக்கோ கல்யாணம் அமைந்திராவிடில் , ஏன் ,கல்யாணமாகவில்லையா, வரன் எதுவுமே  சரியாக   வரவில்லையா,  கிடைக்கவில்லையா, என குடையவும் பார்க்கிறார்கள். நேற்றுக்கூட என்மாமாவின் மச்சினியின்  நாத்தனாரின் மகன் இருக்கிறானே, என்று இப்படி காரியத்திற்கு உதவாத பேச்சுக்களை வித,விதமாக  மனிதர்கள் பேசுவார்கள். கிட்டி முட்டிப்போய் விசாரித்தால் தெரிய வரும், அவனுக்கு கல்யாணமாகி இரண்டொருவருடங்கள் கூட ஆகியிருக்கும். ஆனாலும் நமக்காகவே உதவுவதற்கு சொல்வது போல் பேசுகிறார்கள், சிலர்.

,           சில மனிதர்கள் நம்மைப்பற்றியும் பேசி , பெண்ணை விட இரண்டு அல்லது நான்கு வயது  குறைவான பிள்ளைகளாகவே சொல்லி நாம் ஏதோ தப்பான வயதை கூறி ஏமாற்ற முயல்வது போலவும், தன்னைத்தானே நொந்து கொண்டு பேசி நடிப்பார்கள், நம்மையும் வைத்துக்கொண்டு.

இப்போதெல்லாம் இந்த பிரச்னைகள் குறைந்து வருகிறது.  ஏனெனில் கல்யாணமாலை போன்ற சில அமைப்புகள் மூலம், பிள்ளைகளை பெண்களை கண்டுபிடிப்பதும் சுலபமாக உள்ளது. இந்நாட்களில், பெண்களும் அவரவர் இஷ்டம், அதாவது மனதிற்கேற்றாற்போல் பையன்கள் கிடைக்கவில்லை, என்றால் அப்பா இன்னம் எத்தனை ஆட்களிடம் பல் இளித்து தலை குனிந்து நடப்பார், என்றும்  யோசனை செய்வார்கள் போலும்.

பிள்ளைகளும் தங்கள் இஷ்டம், கனவுகளையேதான் பற்றி  நினைத்து அதை பூர்த்தி செய்து கொள்வதிலேயே, செயல்படுகிறார்களோ எனவும் நினைக்க வைக்கிறது. இப்போதெல்லாம் கலப்புத்திருமணங்கள் நடந்துவிட்டால் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாகவும்  வாழ்ந்தும் காண்பிக்கிறார்கள். இது வரவேற்க வேண்டிய விஷயம்.

கல்யாண சிலவுகளையும் ஆளுக்கு பாதியாகவும் பகிர்ந்துகொள்கிறார்கள். இப்படி எத்தனையோ வரவேற்கும்படியான மாறுதல்கள் காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது.