நம் வாழ்க்கையில் எந்த கடினமான சமயத்தையும், எத்தனை மதிப்புக்குரிய, நம் மனதுக்கு தகுந்த மாதிரியான, உயிர் சிநேகிதர்களிடம் பங்கிட்டுக்கொண்டாலும், அவரவர்களால் தங்கள் சிரமங்களை நினைத்து பார்க்க முடியுமே தவிர, இன்னொருவர் மனக்கஷ்டங்களை புரிந்து கொண்டு ஆறுதலாக கூட பேச தெரிவதில்லை. ஏனென்றால் அது ஒரு சிலரால் மட்டுமே முடியக்கூடிய ஆற்றல். அந்த பாழும் மனசுக்கு , தன்னுள் குடிகொண்டிருக்கும் ஆத்மாவை தவிர வேறெதையும் பற்றி சிந்தித்து பார்க்கும் திறமை கிடையாது. ஆகையால் அவரவர்களின் சிரம சமயங்களில் ஆண்டவனைத்தான் நினைத்து உருக வேண்டும்.
நமக்கு பசிக்கிறது என்பது எதிரில் இருப்பவர்களுக்கு எப்படி புரியும்? அவர்கள் ஜோக்ஸ் அடித்துக்கொண்டு, சினிமாவை பற்றி, டீவி ப்ரோக்ராம், சிநேகிதர்களின் வெற்றி,தோல்விகளைப்பற்றி பேசினால், அட, அதற்கென்ன கவலை இப்போது வயிற்றுப்பசி காதை அடைக்கிறது, இந்த பயலுக்கென்ன வேலை என்றுதான் நினைப்போம்.
இதேமாதிரியில்தான் பல சமாசாரங்களும் நடக்கின்றன. மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு ஈடுபாடுகள் உள்ளன. தனக்காக வாழ்பவர்கள்தான் மிகவும் அதிகமாக காணப்படுகிறார்கள். இந்நாட்களில் பெண்களின் ஈடுபாடு வெவ்வேறு டிபார்ட்மெண்டுகளிலும் இருக்கிறபடியால் ஆண்களின் அதிகார தோரணை தொய்ந்து காணப்படுகிறது. அந்தக்காலத்தில் நம்வீட்டுபெரியோர்களே சொல்லிக்கேட்டிருக்கிறேன், அவன் ஒரு ஆண்சிங்கம் என்று . ஆனால் பெண்ணை அவர்கள் அவள் ஒரு பெண் புலி என்று பெருமையாக கூறி நான் கேட்டதில்லை.
ஆனால் பெண்களை பேய் , பிசாசு அடங்காபிடாரி என்றெல்லாம் வர்ணித்துப்பேசுவார்கள் , வீட்டு ஆசாமிகளே. இப்படியாக எப்போதுமே தன்னுடைய பெண்மணிகளை சொந்த ஜென்மங்களே உயர்த்திப்பேசியதே கிடையாது. ஆனால் மாதர்கள் மனது வைத்தால் அவர்களால் முடியாத வேலையே இல்லை என கூறலாம். இன்றைக்கு மோடி ராஜ்யத்தில் கூட நம் பாதுகாப்பு மந்திரி ஒரு பெண்மணி பதவி ஏற்பதில் என் உள்ளம் குளிர்ந்தது. நம் தேசத்தின் பாதுகாப்பு ஒரு பெண்மணியின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. ஆஹா!! ஜலேபி வாயில் விழுந்தது போல் மனம் துள்ளுகிறது.
இந்நாட்களில் இப்படியாக பெண்பிள்ளைகள் ஆண்களுக்கு இணையாக படிப்பதிலும், பொறுப்பான வேலை பார்த்து சம்பாதித்து வருவதால் கொஞ்சம் உயர்வாக காண்பித்து பேசுகிறார்கள் . பெண்களுக்கு தனக்குத்தானே உயர்த்திக்காண்பித்து கொள்ளும் சமயம் வந்துவிட்டது . உன்னாலும் முடியும் என்பதை செய்து காட்ட வேண்டும்.
Leave A Comment