பொறுப்பு என்பது சாமான்ய விஷயம் கிடையாது. பொறுப்பை எடுத்துக்கொண்டவர்களை கேட்டால் நிறைய கற்றுக்கொள்ள சான்ஸ்  கிடைக்கும்.சாதாரணமாக பொறுப்பை எடுத்துக்கொள்பவர்களுக்கு உரிய  சம்மானம் கிடைக்குமா என்பது சந்தேகமே. கிடைக்காது என்பதே கசப்பான உண்மை.

இரண்டாவதாக பொறுப்பை எடுத்துக்கொள்பவர்கள் எந்த மனக்குறைகளையும் பெரிது படுத்திக்காட்டி கொள்ளக்கூடாது. பொறுப்பை எடுத்துக்கொண்டுவிட்டால் எக்காரணத்தை கொண்டும் பின் வாங்க கூடாது. மேலும் பொறுப்பு என்பது  தலைசுமை மாதிரி மட்டுமில்லாது , வேண்டாத பேச்சுக்களையும் ஜீரணம் செய்து கொள்ளவும் தயாராக இருக்கவேண்டும். எந்தமாதிரியான பொறுப்பையும் தன்னலமில்லாத தன்மையுடனே செய்யவேண்டும்.

பரோபகார எண்ணங்கள் உள்ளவர்களால் மட்டுமே பொறுப்பை எடுத்துக்கொண்டு, கெட்ட பெயரையும் வாங்கிக்கொள்ள தயாராகவும் இருப்பவர்களால்தான் சாத்தியமாகும்.

இன்னொரு விஷயம் என்னவென்றால், அவரவர் வேலையானவுடன், தன்னை அழகாக கழட்டிக்கொண்டு தள்ளி நின்று வேடிக்கையும் பார்ப்பார்கள். பொறுப்பை எடுத்துக்கொண்டு செய்தவர்களை வாயார வாழ்த்த கூட மாட்டார்கள், பதிலாக அவர்கள் செய்திருந்தால்  நான் செய்திருந்தால், இவ்வாறு பிளான் செய்து முடித்திருப்பேன், அப்படி, இப்படியென்று வாய் கிழிய பேசுவார்கள்.

பணப்பொறுப்பை எடுத்துக்கொண்டோமானால், நம்மை கமிஷன் ஏஜண்டுகளாக்கி விடுவார்கள்.பிள்ளகளை வளர்க்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டால், பிள்ளைகளை நாமே பார்த்து, பார்த்து வீண் அடித்து விட்டதாகவும் வதந்திகளையும் பரப்புவார்கள்.

காதில் கேட்பவர்களுக்கும் சுவாரஸ்யமாக இருக்கும்.  மேலும் மசாலா கலந்தும் பேசுவார்கள், பிறரிடம். கேட்பவர்களும் ,எனக்கும் ஏற்கெனவே தோன்றியது, இவர்களிடம் பொறுப்பை தந்தால் சரியாக நடக்காதோ என்று ஆனாலும் நீ யோசித்துதானே செய்வாய் என்றும் நினைத்தேன் என்றும் கூறி தூண்டுகோலை தாராளமாக போட்டும் கொடுப்பார்கள். ஆகையால் பொறுப்பை எடுத்துக்கொண்டால் எந்த அடியையும் வாங்கி கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்..