கிராமத்தில் வாழ்ந்த எங்கள் அப்பாவை கிராமத்து ஆட்கள் சின்னையா என்றுதான் சொல்வார்கள். அந்த சின்னையாவிற்கு மெத்த படிப்பு இல்லையென்றாலும் மகாபுத்திசாலி. வயலில் இறங்கி வேலையாட்களோடு தானும் வேலை செய்வார். கிராமத்தில் ஜட்ஜ் மாதிரி சண்டைகளை தீர்த்து  நியாயம் கூறுவார். சாயங்காலத்தில் பிள்ளைகளுடன் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் பண்ணுவார், பாரபட்சமே பார்க்க மாட்டார். அவருக்கு பன்னிரெண்டு குழந்தைகள். ஒரு பிள்ளை பதினெட்டு மாதங்களில்  தவறி விட்டது. மற்ற பதினொரு பிள்னளைகளுக்கும் எங்கள் பெற்றோர்கள்தான் தாரை வார்த்து கல்யாணம் செய்து கொடுத்தார்கள். அதிர்ஷ்டசாலிகள் நாங்கள் என்பதை மகா பெருமையாக கூறிக்கொள்கிறேன். என் பெரிய பெரியப்பா என் பெற்றோரை பற்றி குறிப்பிடும்போது  வள்ளுவனுக்கேற்ற வாசுகி என்று என் அம்மாவை பற்றி கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வரும்போது மனம் மகிழும்.

அவர் கிரகணம் பிடிக்கும் அன்றெல்லாம் இரவோ,பகலோ இடுப்பளவு குளத்தில் தண்ணீரில், நின்று கிரகணம் ஆரம்பித்ததிலிருந்து, முடியும் மட்டும், என்னவோ ஜபித்துக்கொண்டே தண்ணீருக்குள் நின்றுகொண்டு இருப்பார். எந்த பூச்சிகடி, பாம்புக்கடியால்  பாதித்தவர்களுக்கு ஒரு துளி மண் எடுத்து  பழைய வேஷ்டி துணியை மெல்லியதாக கிழித்து,  அதில்4, 5, 6, 7, 8 இடங்களில்  வைத்து கட்டி கழுத்தில்கட்டி கொள்ள தருவார். அவர் வாழ்ந்த கிராமத்தை தவிர, மற்ற அக்கம்பக்க கிராமத்திலிருந்தும் அவரை தேடி வந்து மாலை போட்டுக்கொள்ள வருவார்கள். இரவோ பகலோ எப்போதும் மந்திரித்து மாலை போட தயாராக இருப்பார். கூட்டம் வரும் சமயம் அழுத வண்ணம் வருவார்கள்.ஒன்று,இரண்டு மணிநேரத்தில் திரும்பி போகும் சமயத்தில் மயக்கமாக எதுவும் செய்யமுடியாது ,செயலற்று கிடந்தவர்கள் நடந்து போய்வண்டியில் ஏறிக்கொண்டு  போவதை பார்த்திருக்கிறேன்.

நாங்கள் சின்ன பிள்ளைகளாக இருந்த நாட்களில் எங்களில் ஒருவர் மந்திரவாதி போல்கண்ணை மூடி, மூடி திறந்து கையில் கந்தையாகிப்போன வேஷ்டியிலிருந்து துணி கிழித்து  முடிச்சுப்போட்டு  மந்திரம் செய்வதுபோல் நடித்தும் விளையாடுவோம்.பெரிய

இப்போதுதான் தோன்றுகிறது இப்படிக்கூட ஒரு ட்ரீட்மென்ட் உலகில் உண்மையிலேயே இருந்திருக்குமா என்று. உண்மையிலேயே இருந்திருக்கிறது என்பது தான்உண்மை !!