மனிதர்களுக்கு பரிவு என்பது யார் தன்னைவிட பலகீனமானவர்களாக இருக்கிறார்களோ அவர்களிடம்தான் வரும். சில சமயங்களில் இதைப்பற்றி நினைத்தால் மனதில் பலமானவர்கள், தன்னைவிட மனதளவில் சக்தி குறைந்தவர்களாகவும் இருந்தால், அவர்களுடன் பேசி, பேசி அவர்கள் மனதில் என்ன ஓடுகிறது என்பதை கண்டு கொண்டு அவர்களை தன்னுடைய கைக்குள் அடக்கி வைக்கவும் பிளான் பண்ணக்கூடும்.
இது உண்மையான பரிவா? நம்மைவிட பணபலம் மற்றும் மனபலத்தில் குறைந்தவர்களாக காணப்படுவதால் கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்க ஏற்படும் அனுதாபம் இது.
பண பலத்தில் குறைந்தவர்களை,பண கஷ்டம் இருந்தால், பணத்தை திரும்ப பெறும் நம்பிக்கையும் நம்க்கு இருக்குமானால் நாம்,நல்ல மனதுள்ள கோடீஸ்வரனாக இருந்தால் முடிந்த வரை பணத்தை கொடுத்து உதவி செய்யலாம்.ஆனால் அதே பழக்கத்தையும் நாமே கற்றுக்கொடுத்து விட்டு நாமும் பணத்தை வசூலிக்கமுடியாமல் திண்டாடவும் முடியாது.
மனோபலம் கொடுக்க தனியான பொறுப்புணர்ச்சி கலந்த நல்ல புத்தி போதனைகளையும் கூறலாம். பிடிவாதம், முரட்டுத்தனமான சுபாவம் உள்ளவர்களை, அடக்கியாள்வதும் மிக கடினமான வேலைதான். பிறர் கூறுவதை காதில் வாங்காமலே பேசுபவர்களையும் யாராலுமே வழிநடத்த முடியாது. அவர்களுக்கு பரிவுணர்ச்சி காட்டுகிறோமோ அந்த அளவுக்கு எதிராளி பலப்பட்டு எதிர்த்தாலும் எதிர்ப்பார்கள். சில பேர்வழிகளை தட்டிக்கொடுத்துத்தான் பேசவேண்டும்.பரிவுரைகள் என்பது மருந்து போல் இருக்கவேண்டும்.
அடிக்கடி பரிவாகப்பேசி மனதை தைர்யப்படுத்த பார்த்தோமானால், அதே பழக்கமாகவும்போய்விடும். எப்பொழுதும் நாம் தைரியம் சொல்லி பரிந்துரைக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். தனக்கென யோசிக்கும் தன்மையும் போய் விடும். எந்த பிரச்னைக்குமே ஒரே ஒரு விடை கிடையாது.யோசித்து பார்த்து நம்மால் முடிந்தவைகளை நல்லவிதமாக எடுத்துக்கூறி பிரச்னையை தவிர்க்க பார்க்கவேண்டும்.
Leave A Comment