வெற்றி, என்பது நம் கையில் இல்லை. அதேபோலவே தோல்வி என்பதும் நம் கண்ட்ரோலில் கிடையாது. படிப்பில் முன்னேறிய புத்திசாலிகள், சொந்த வாழ்க்கை நடத்துவதில் திணறுவார்கள். ஒரு சில மனிதர்களுக்கு பிறர் கூறி வேலையை முடிப்பது சுலபமாக இருக்கும். புத்தகபுழுக்களுக்கு வெறும் எழுத்துக்களை படித்து பழக்கமாகி விட்டபடியால் வாழ்வின் நடைமுறையில் என்ன செய்து விவகாரங்களை சரி செய்ய முடியும் என்பதை அவர்களுக்கு நினைத்துப்பார்ப்பதே மீன் மரத்தில் ஏறுவதற்கு சமானமாக இருக்கும். பெரியவர்கள் சொன்னது எத்தனை உண்மை என்பதை யோசித்து, நினைத்துப்பார்த்தால் உண்மை புரியும். ஏட்டு சுரைக்காய் சமையலுக்கு உதவாது என்பது. புத்தகத்தில் படத்தில் பார்க்கும் காய்களை நறுக்கி சமைத்து சாப்பிட முடியுமா?
வாழ்க்கையானது மேலும் கீழுமாக போக கூடியதுதான் . இழப்பை சரிக்கட்டி வாழ்க்கையை தொடர வேண்டும். இழந்ததை அடைந்தால்தான் தன்னால் வாழ முடியும், ஆனால் இழந்தது நமக்கு கிடைக்காது என்று தெள்ளத்தெரிந்தும் அசட்டு பிடிவாதம், வறட்டு ஜம்பங்கள் போன்றவைகளை விடாப்பிடியாக வைத்துக்கொண்டிருந்தாலும், சரிக்கட்டிக்கொண்டு முன்னுக்கு வருவது கடினமே. வாழ்க்கையில் மனிதனுக்கு கடினமான கட்டங்கள் வரும் என்று எதிர்பார்ப்பது வேறு, அந்த கட்டங்கள் வரும்போது தாண்டி வந்து நிமிர்ந்து நிற்பது வேறு. வாழ்வில் கடினமான சமயங்களிலும் மனம் சரிந்து ஓய்ந்துவிடாமல் இருப்பது அத்தனை சுலபமல்ல. அதற்காக பிராக்டிஸ் செய்து, டிரெயினிங்கா எடுத்துக்கொள்ள முடியும்? எப்படி வருகிறதோ அப்படியே ஓட்ட கற்றுக்கொள்ளவேண்டும்.
மனித வாழ்க்கையில் எண்ணற்ற இன்னல்கள் வரலாம். மனம் ஒடிந்துவிடாமல் மனதை திடமாக வைத்திருந்தால் யோசித்து செயல் புரியலாம். உதாரணத்திற்கு எத்தனையோ ஆட்கள் இருக்கலாம். ஆனால் அந்த கட்டத்தை அவரவர் அனுபவித்தால்தான் உணர முடியும். நம் வயிற்றுப்பசியை வேறு யாராவது உணர முடியுமா?
Leave A Comment