பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்று பேச்சுக்குத்தான் சொல்வார்கள். பணத்தால் பிணத்தை எழுப்பி நடக்க வைக்க முடிந்தால் பூமியில் சாவு என்பதே இல்லாமல் போய் விடும். பணத்தால் மழையை வரவழைக்க முடியுமா ? பணத்தினால் பூகம்பத்தை நிறுத்த முடியுமா? பசியை வரவழைக்க முடியாது. பணத்தால் தூக்கத்தை வாங்க முடியுமா?
இப்படியாக பணமிருந்தால் எல்லாவற்றையுமே செய்வது என்பது நடக்காத காரியமே!!பணம் என்பது ஒரு கருவி போல். பணத்தை நாம்தான் ஆளவேண்டும் . பணமிருந்தால் நானும் அதை செய்திருப்பேன், இதை முடித்திருப்பேன் என்று வாய்ப்பந்தல்தான் போடலாம். நமக்கு நல்ல சுகம் வேண்டுமென்றால் பணத்தினால் எல்லாவற்றையும் வாங்கமுடியாது.. அதிக பணமிருந்தால் ஊர் சுற்றி, நாடு சுற்றி,தேசங்கள் சுற்றலாம். வேண்டாதவைகளை வாங்கி, தின்று உடம்பை வீணாக்கிக்கொள்ளலாம்.
பணம் கையில் சேரும்வரை மனதில் எல்லாவிதமான தான தர்மங்கள் செய்யவேண்டி, நினைத்திருப்போம். ஆனால் பணம் கையில் வந்தவுடன் எல்லாவிதமான தர்ம எண்ணங்களும் மனதிலிருந்து மறைந்து விடும். நமக்கு எதெல்லாம் விருப்பமோ அவைதான் ஞாபகத்தில் வரும் என்பதில் சந்தேகமில்லை . மனித மனம் சஞ்சலத்தால் நிறைந்திருக்கும் ஒரு இயந்திரம்.
Leave A Comment