ஒருநாள் காலை நான் கிச்சனில் வேலையாக இருந்தபோது பிரிட்ஜ் கதவை யாரோ படாரென்று அடித்து மூடிய சத்தம்கேட்டு கோபத்துடன் யார் இப்படி பிரிட்ஜ் கதவை மூடுவது,என்று சத்தமாக கேட்டு பயமுறுத்துவது போல் ,இதோ வந்து பிரிட்ஜை பூட்டி விடுவேன், யாராலும் திறக்க முடியாது, என் பர்மிஷன் இல்லாது, அது, இது என்று ஒரே அருட்டியும் உருட்டியும், பேசிக்கொண்டிருக்கும் போதே, மறுபடியும் பிரிட்ஜ் கதவை, படாரென்று அறைந்து மூடும் சத்தம் கேட்டு நான் வெளியில் போய்பார்த்தால் , ஆறு குரங்குகள் வரிசையாக உட்கார்ந்து கொண்டு இருந்தன, பிரிட்ஜ்க்கு அருகில் உட்கார்ந்து கொண்டிருக்கும் லீடர் குரங்கு பிரிட்ஜை திறந்து மாம்பழத்தை ஒன்றின் கையில் விட்டெறிகிறது. மற்ற குரங்குகள் பாஸ் ஆன் பண்ணுகிறதை பார்த்த எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இதே போல் ஆறு மாம்பழங்களை எடுத்துக்கொண்டு சென்று விட்டன. ஆனால் தான் மட்டும் சாப்பிட்டால் பத்தாது தன் குரூப்புடன் ஷேர் செய்து கொள்ள நினைத்து செய்ததுதான் என் மனதை கவர்ந்தது. சாயங்காலம் மொட்டை மாடியில் போய் பார்த்த போது தெரிந்தது ,மாம்பழங்களைஅனுபவித்து தின்றதோடு நிற்கவில்லை. நாலுபக்கங்களிலும் கொட்டைகள், மாம்பழங்களின் தோல்களை வாரியிறைத்து விளையாடி நன்றாக அனுபவித்து விளையாடியும் சென்றிருக்கிறார்கள்,அழையாத விருந்தாளிகள். அன்றையிலிருந்து கதவை கையோடு மூடுவதும் பழக்கத்தையும் உண்டாக்கி கொண்டோம்.
Leave A Comment