கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும்,அதை அதி ஜாக்கிரதையாக காப்பாற்றி,வாழ்க்கையை, நடத்தவேண்டும் எனவும் கேட்டிருக்கிறோம். இப்போது காலம் மாறிவிட்டது, மனிதமனங்கள் மாறிக்கொண்டே கொண்டேயிருக்கின்றன, ஓரிடத்தில் நிற்காமல்.
அன்பு என்பது இருந்தால் பொறுமை உண்டாகி சகிப்புத்தன்மையுடன் மன்னிப்போம். ஆனால் அன்பேயில்லாது தன்னிச்சைக்காகவே, ஆசைவார்த்தைகளால் பந்தல் போட்டு,மனதை மடக்கிவைத்துக்கொண்டு நாடகமாடுவது எப்படிப்பட்ட பாவம் என நினைத்தாலே மனம் நடுங்குகிறது.
மனித மனத்தின் ஆழத்தை கண்டறிந்தவர் யார்? காசிநாதன் என்ற கேடிக்கு முதல் கல்யாணம் ஆகி ,முறிந்து விட்டதாக கூறியதால், மலர் அவன் பேச்சில் மயங்கி, அவனுடன் மறுமணம் செய்து கொள்ள மனப்பூர்வமாக ஒத்துக்கொண்டுவிட்டாள். ஒரே இலாக்காவில் வேலைசெய்து வருவதால், அடிக்கடி ஒருவரை மற்றவருக்கு தெரியாமலே பார்த்து, பார்த்தே நேசிக்கும்தன்மை உண்டாகிவிட்டது.
அவனோ வேறு ஒரு குடும்பத்தை தனக்கும் மலருக்கும் பாலமாக வைத்துக்கொண்டு அவளை வளைத்துப்போட்டு மணம் முடிக்க முடிவு செய்து ,விடாது தொடர்ந்து வந்து பாச கயிற்றால் வளைத்துப்போட்டும் விட்டான். ஒருநாள் மலர் பஸ் ஸடாப்பில் மழைக்காக ஒதுங்கி உட்கார்ந்திருந்ததை கண்டு, வலிய வந்து தானும் அவள் வேலை செய்யுமிடம் வழியாகப் போவதால் அவளை இறக்கி விட்டுப் போவதில், தனக்கு சிரமுமேயில்லை என கூறி, மோட்டார் சைக்கிளை நிறுத்தி பாசக்கயிறை வீசி விட்டான். அவளுக்கும் அவனை அடிக்கடி பார்த்திருக்கிறாளே தவிர மனதில் வேறெதும் தோன்றியதில்லையாம். திரைக்கு பின்னால் எத்தனையோ நடந்திருப்பது மலருக்கு தெரியவில்லை. அவளுடைய முதல் கல்யாண கலக்கலே அவள் மனதிலிருந்து அழிந்திருக்கவில்லை இது நாள் வரை.
அடுத்தபடியாக நீங்கள் வேலை செய்யும் காம்ப்ளெக்ஸில் கார் துடைக்கும் பணி இருந்தால், தனக்கு தெரிவிக்குமாறு மிகுந்த அடக்கத்துடன்வேண்டுகோள் போட்டு, இப்படியாக மாதம் ஒரு, இரு முறைகள் வலுவில் பேசி மடக்கி அவளை தன் கைக்குள் வளைத்துப் போட்டு விட்டான். பெற்றோர் இல்லாத காரணத்தால் அக்கா குடும்பத்துடன் தங்கியிருந்து, வீட்டு வேலைகள், மற்றும் சமையல் போன்ற உதவிகளை செய்து கொண்டு வெளியில் சென்றும் பணக்கார குடும்பங்களுக்கும், மிகுந்த ஒத்தாசைகள் செய்வதுடன் நம்பிக்கைக்கு பாத்திரமான மனித ஜன்மமுமாக நாட்களை எண்ணாமல் தள்ளிக் கொண்டிருந்தாள். அவளுக்கும் தனக்காக வாழ்வில் ஒருவன் கிடைத்துவிட்டான் என நினைத்து மனம் மகிழ்ந்தும் போனாள். எப்பேற்பட்ட பாச வலையில் சிக்கப்போகிறாள் என்பதே தெரியாமல் சிக்கிக்கொண்டு விட்டாள்.
இப்படியாக மனதில் ஒரு த்ரில் இருந்தாலும், அவளையறியாமலேயே கூடவே திகிலும் இருந்தது. உலகில் வேஷதாரிகளுக்கு பஞ்சமேயில்லை. அவளுக்கும் அவனை பார்க்காத நாள் வருடமாக தோன்ற ஆரம்பித்த சமயம் அக்காக்களிடம் தன் மனதை திறந்து கொட்டி , அவர்களும் கல்யாணத்தை நடத்தி வைத்தார்கள். இவள் புருஷன் வீடு போய்ச்சேர்ந்த மறுநாளே முதல்மனைவியும் வந்து விட்டாள், இவர்களுடன் தங்க, தன் பெண்பிள்ளையையும் கூட்டிக்கொண்டு, இவர்கள் இருக்குமிடத்திற்கு. நான்கு நாட்கள் தங்கிவிட்டு தன் பிறந்த வீட்டிற்கு சென்றதும் அங்கு அவளுடைய தம்பியின் புது பெண்டாட்டி, அக்கா எதற்காக அடிக்கடி வந்து நிற்கிறாள் என சண்டை பிடிக்க ஆரம்பித்ததும் முதல் பெண்டாட்டிக்கு, பிறந்த வீடு நரகமாகி விட்டது. எங்கு போவதென்பதே புரியாது மறுபடியும் தன் கணவன் வசிக்கும் இடத்திற்கே வசிக்க வந்து விட்டாள்.
புது பெண்டாட்டியை பகைத்துக்கொள்ள பயந்தோ என்னவோ அவனும் நீ கிராமத்தில் தன் பெற்றோரிடம் போய்இரு என்றும் கூறி, இரண்டாவது மனைவியை துண்டித்து எறிந்து விட்டு வருவதாக வாக்களித்து இருவரையும் ஏமாற்றினான். இரண்டாவது மனைவிக்கு எப்போது கருத்தரிக்க ஆரம்பித்தாலும் கலைத்து விட்டுத்தான் மறுகார்யம் செய்வான். அவளுக்கு புரிய ஆரம்பிப்பதற்குள், இருமாதங்களுக்கு ஒரு முறை கருக்கலைப்பு நடக்கும். இப்படியாக வாழ்க்கையில் எதையுமே காவல்காத்து காப்பாற்றவும் முடியாமல், தேடிப்பிடித்துக்கொண்ட உறவை விடவும் முடியாமல் பகிர்ந்து கொள்ளவும் முடியாமல் தவிக்கும் அபலைகள் இன்றைக்கும் இருந்துவருகிறார்கள்.
Leave A Comment