இன்றைய தலைமுறையினருக்கு கடிதம் என்றாலே என்னவென்று புரியாமல் திண்டாடுவார்கள். அவர்களில் எழுத்து வளம் உள்ளவர்கள் மிகவும் குறைவே.இந்த நவீன யுகத்தில் யாருக்கும், யாருடைய தொடர்பும் அவசியமேயில்லாத அளவுக்கு போய்விட்டது.ஆகையால் தபால் நிர்வாகத்தின் வேலை கணிசமான அளவில் குறைந்துவிட்டது என்னவோ உண்மைதான். யூனிபார்ம் அணிந்த தபால்துறையினரை பார்ப்பதே கிடையாது.வேலைகள் வேகமாக நடந்த போதிலும், ஈமெயிலும், செல்போனும் மனிதர்களை மிகவுமே சோம்பேறிகளாக்கி விட்டது. எத்தனை போஸ்ட் ஆபீஸ் ஆட்கள் வேலையை இழந்தார்களோ கணக்கு தெரியாது.
பிள்ளைகளுக்கு பள்ளியில் படிக்கும் சமயங்களில் எழுதிய லீவு லெட்டர்களும் மறந்துவிட்டிருக்கும். கடிதம் எழுதுவது என்பது ஒரு உன்னதமான ஒரு கலை. கல்யாண பத்திரிகைகளுக்கு ஏராளமான மாதிரிகளை காண்பித்து விடுகிறார்கள். அதைப்பார்த்து பெயர்களை மாற்றி, மறைத்து பத்திரிகைகளில் போட்டுவிடுகிறார்கள். இதே போலவே ரெடிமேடாக பிறந்தநாள் பத்திரிகையிலிருந்து எடுத்துக்கொண்டால், எதற்குத்தான் சாம்பிள் கிடைக்காது?
வேறென்ன வேண்டும்? இந்த சோம்பேறி உலகத்திற்கு ஏற்றாற்போல் போல் எல்லாமே ரெடிமேடாக கிடைத்து விடுகிறது. மேசை, நாற்காலிதான் தேவை, உட்காருவதற்கு.
டிவி என்ற பேசும் படம் இருபத்திநான்கு மணி நேரமும் வேடிக்கை காட்ட காத்துக்கொண்டிருக்கிறது. மணிக்கணக்கில் பேசும் படம் பார்த்து மனிதர்கள் செயலிழந்துவிடும் நிலைக்கு வந்து விட்டார்கள்.மனித மூளையை எத்தனை குறைவாக உபயோகிக்கிறோமோ அத்தனைக்கத்தனை அது டல்லாகி விடும் என்று தெரிந்தும், நாம் எல்லோருமே இயற்கை பலத்தை இழந்து செயற்கையாக வாழ முயற்ச்சிக்கிறோம். இதனுடைய விபரீத விளைவுகள் போகப்போக தெரியும்.
Leave A Comment