பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எல்லாவிதமான படிப்பறிவுகளை கொடுத்து, எல்லாவற்றிலுமே ஹீரோவாக்கி விட பெற்றோர் துடிக்கிறார்கள். இது குருடனை ராஜபார்வை மாதிரி ஒரு போஸ் கொடு,போட்டோ பிடிப்பேன் என கூறுவதற்கு சமானமாகி விடுகிறது. பிள்ளைகளை நாம் ஓரளவுக்குதான் நம்மால் உருவாக்க முடியும்.எதை உருக்கி அச்சில் போட்டு உருவங்கள் செய்ய முடியுமோ அவைகளால் மட்டுமே செய்யமுடியும்.
பெற்றோர்களும் பிள்ளைகளின் மனதை தெரிந்து கொள்ள முயற்ச்சிக்காமல் தங்களுக்கு என்ன ஆசை,அபிலாஷைகளை,பூர்த்தி செய்யமுடியாமல் போயிற்றோ அதை தங்கள் பிள்ளைகள் மீது திணித்து தங்கள் மனோவேகத்தை தணித்துக்கொள்ள பார்க்கிறார்கள்.படிப்பறிவும் ஒரு அளவுக்குத்தான் வாழ்வின் முன்னேற்றத்தை கொடுக்கபார்க்கும்.
புளியங்காய்க்கும், மாங்காய்க்கும் புளிப்பையும்,பாகற்காய்க்குள் கசப்பையும் யார் புகுத்தினார்கள்,என யோசித்து விடை காண முடியாத மாதிரிதான், நம் வாழ்க்கையில் சில கேள்விகளுக்கு பதில் கிடைப்பதில்லை. ஆண்டவன் எதை அளிக்கிறானோ அதை மட்டும் நாம் அனுபவிக்க ஆசைபட்டால் நன்றாக இருக்குமோ என நினைக்கத்தோன்றுகிறது. ஆனால் இந்த பாழாய்போன மனது அலைபாய்கிறது.
லட்சத்தில் ஒருவன் ஞானியாகலாம்.ஆனால் யாருமே எவரையும் அவர்களுக்குள் இல்லாத ஒருகுவாலிடியை புகுத்தி முன்னுக்கு கொண்டு வைத்து சிம்மாசனத்தில் உட்கார்த்திவைத்து பார்க்கமுடியாது.அவரவர்களுக்குள் இருக்கின்ற குணக்கேடுகளையும். நல்ல குணங்களையும் ஆடைகள் அணிவது போலவோ,களைவது போலவோ மாற்றிக்கொள்வது நடக்காத வேலைதான்.ஒவ்வொரு மனதுக்குள்ளும் வெவ்வேறு சைத்தான்கள் புகுந்து ஆட்டி வைக்கப்படுகிறார்கள்.
இதே பையனுக்கு கல்யாணமாகி அவனுடன் வசிப்பதற்கு பெற்றோர் போனால், ஆயிரம் குற்றபத்திரிகைகள் படித்து மனதை புண்படுத்திக்கொண்டு வருகிறார்கள். பையன் எங்கே வேண்டுமானாலும் போய்இருக்கட்டும், அவரவர் குடும்பத்தை கவனித்துக்கொண்டு எங்கேயாவது சௌக்யமாக, சந்தோஷமாக அவரவர் குடும்பத்தை கவனமாக காப்பாற்றி வைத்துக்கொண்டிருந்தால், எனக்கு அதுவே போதும், என்று வாய் கூறுகிறது. என் தலைசாய்கின்ற வரை, கஞ்சியோ,கூழோ எதையோ சாப்பிட்டு விட்டு கிடக்கிறோம் என்று மனது நினைக்க தொடங்கும் போது மனதுக்குள் கசப்பு தட்டுகிறது.
வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்னைக்கும், நாமே முடிவெடுக்க முடியாது தவிக்க வேண்டி வருகிறது.
Leave A Comment