பசியும், தாகமும் வந்து உண்ணவும், குடிக்கவும் கிடைக்காத சமயம்தான் அதன்மவுசு அதிகரிக்கிறது . பசியும் ,தாகமும் அக்கா,தங்கை போல. பசி என்பது வாட்ட ஆரம்பித்து விட்டால் தாங்கவே முடியாது. பசியென்பது வந்தால் பத்தும் பறந்துவிடும் என்பது பழமொழியாகும். ஆனால் அது உண்மையான வார்த்தைகளே. பசி என்றால் வயிற்றுபசி ஒன்றுதான் என்பது இல்லை. தன்னிடம் எது ஒன்று இல்லையோ அதற்காக ஏங்குவதும் ஒரு விதமான பசிதானே. தனக்கு வேண்டுமென்பது கிடைக்காமல் போனால் தாபம் அதிகரிக்கிறது. அதுவும் ஒரு வித பசியே . நம்மை சார்ந்தவர்களுக்கு எல்லாமே கிடைத்துவிட்டது போல், நமக்கு மட்டும் வேண்டியது கிடைக்கவேயில்லையென்று நாம் நினைத்து வாடினால், அதுவும் ஒரு பசியேதான்.வேலை தேடும் சமயம் வேலை எங்கிருந்தாலும் போவேன், எந்த வேலையாக இருந்தாலும் செய்வேன். நாணயமான இருப்பேன். எனக்கு வேலை என்று எங்கிருந்தாலும் ஓடுவேன் என்கிறார்கள், கொஞ்ச காலம் செய்தபின் அலுப்பு தட்டுகிறது. மனித வாழ்க்கையில் , நம்மிடம் ஏதோ ஒன்று இல்லாமல் இருப்பதாக தோன்றும் சமயங்களில் இந்த மாதிரி ஏதோ ஒரு பசி பீடித்து நம்மை ஆட்டிப்படைக்கிறது என்பது உண்மையே. தவிர்க்கமுடியாத ஒரு குணம் இது .
நிறைய சமயங்களில் பார்த்தால் எவருக்குமே ஆசை என்பது அதிகரித்துக்கொண்டே போகிறதே தவிர குறைவதில்லை. பலசமயங்களில் ஆசை என்பது அவரவர்களின் பிறப்புரிமை போலாகிவிடுகிறது. வயிற்றுப்பசியை சோறு, தண்ணீர் கொடுத்து அடக்கி விட முடியும். இந்த மனப்பசியை அடக்க மட்டும் மனோதைர்யம் , கட்டுப்பாடு போன்ற அசாத்ய நற்குணங்கள் இருந்தாலொழிய சாத்தியமாகாது. இந்த பாழாய்ப்போன மனம் இருக்குமிடம் தெரியவில்லை, ஆனால்அது படுத்தும்பாடு ஏராளம். ஏக்கங்களை அதிகமாக காண்பித்து, நம்க்கு வேண்டியவைகளை கொடுக்காமல், பிறருக்கே கொடுத்து நம்மை துக்கத்தில் ஆழ்த்தி ஏக்கங்களை அதிகப்படுத்துகிறது. மனதின் விசாலத்தையும், ஆழத்தையும் கண்டே பிடிக்க முடியாது, திண்டாடுகிறோமே…
Leave A Comment