உனக்கென்ற வாழ்வு எதுவென்று நினைத்தாய்?..அது கிடைக்காதென்று தெரிந்தும் அதை எதிர்பார்த்தாயா?
யாராலும் உன்னை திருப்தி செய்யமுடியாதென்று தெரிந்த போதும், ஏக்கமெதற்கு?
ஆவலுடன் ஓடியாடி ஊர், நாடு சுற்றி உன் உலகை பெரிதுபடுத்திக்கொள்ள பார், காலம் ஓடிப்போனாலும்
மனதை ஓட விட்டு விடாதே, எதற்கும் துணிந்தும், பணிந்தும் இருப்பதையே உலகம் விரும்பி வரவேற்கும்.
உன்னிடம் இதுவுமில்லை அதுவுமில்லை என தோன்றும்போது உன்னையே, எதற்காக வேண்டுமென்று உலகம் நினைக்கும்.
காலம்தான் காட்சி என்றாலும், காட்சி என்பதையும் கண்டுகொண்டாய். உன்னைவிட உனக்காக காலம்தான் கதை சொல்லும்.
காலத்தின் கோலம் என்று வரும்போது, கோடிட்டுப்பார், நீ நினைத்தவைகளே உனக்கு கிடைத்துள்ளதாவென….
கதறி, கதறி யழுதாலும் உனக்கென விதித்ததுதான் நடக்குமென நம்பி வாழ கற்றுக்கொள்…
Leave A Comment