நான்காவது வகுப்பில் படிக்கும் பெண்பிள்ளை, அவ்வகுப்பில்பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்த சமயம் டீச்சர் அங்குமிங்குமாக நடந்துகொண்டு பிள்ளைகளுக்கு விவரித்துகொண்டு வரும்போது ஒரு பெண்பிள்ளை டீச்சர் காலில் அணிந்திருந்த ஹைஹீல்ஸ் செருப்பையே கவனித்து வண்ணம் இருந்திருக்கிறாள். டீச்சர் நடத்திய பாடத்தில் மனம் லயிக்கவில்லை போலும். டீச்சரும் இரண்டு மூன்று ரவுண்ட்ஸ் அடித்து விட்டு பிள்ளைகளிடம் நடந்த பாடத்தில் ,கேள்விகள் கேட்டிருக்கிறார்.சில பிள்ளைகள் பதில் கூறியபின் இந்த பெண்ணின் முறை வந்ததும், இந்த பெண்ணிடம் கேள்வி கேட்டதும் திரு,திருவென்று எதுவும் புரியாமலே நின்றிருந்திருக்கிறாள். டீச்சர் மிரட்டி நான் கிளாஸ் எடுக்கும் சமயம் உன் கவனம் எங்கேயிருந்தது, என்ன செய்து கொண்டிருந்தாய் என கோபத்துடன் கேட்டு வகுப்பறைக்கு வெளியில் நிறுத்திவிட்டார்.உங்கள் ஹைஹீல்ஸ் அழகாக இருந்தது அதையே பார்த்துக்கொண்டிருந்தேன்என்று கூறியிருந்திருக்கிறாள்.
இந்த பெண் வகுப்பறைக்கு வெளியில் நிற்கும் சமயம், பிரின்ஸிபால் மேடம் ரவுண்டில் வந்த சமயம்இந்த பிள்ளையை வெளியில் நிற்கும் காரணம் கேட்டவுடன் உண்மையை அறிந்து கொண்டு அன்றிலிருந்து பள்ளியில் டீச்சர்கள் பாடம் நடத்தும் சமயம் ஹைஹீல்ஸ் அணிய தடை விதித்து விட்டார்கள்.
Leave A Comment