எப்பேர்பட்ட சகலகலாவல்லவர்களாக இருந்தாலுமே, வாழ்க்கை என்ற சமுத்திரத்தில் போராடாமல், நாம் நினைத்தவைகள் எதையும் சாதிக்க முடியாது. எத்தனை போராடினாலும் வென்று விட முடியும் என்பதற்கு கியாரண்டி இல்லை. நாம் சாதித்துவிட்டோம் என்பதற்காக யாரும் நம்க்கு புகழாரம் அணிவிக்கப்போவதில்லை.எத்தனையோ சாதனைகள் புரிந்தவர்கள் இருக்கும்போது நம்மைப்போன்றவர்கள், ஒரு சொட்டுத்தண்ணீரை சமுத்திரத்தில் கலந்து விட்டு சமுத்திரமே பொங்கி வழிந்து விட்டாற்போல் பேசுகிறோமோ என நினைக்கவைக்கும்படியாக உள்ளது மனித வாழ்க்கை. ஆனாலும் முயற்சியை கைவிடாது செய்துகொண்டு நல்லவைகளையே செய்து விட வேண்டும் என்ற எண்ணம் இருப்பதே நல்லது. வாழ்க்கை போராட்டங்கள் என்பதற்கு பத்து,பதினைந்து,இருபது என்று கணக்கு வைத்துக்கொண்டு பார்க்கமுடியாது. சில பெற்றோர்கள் தான் பெற்றபிள்ளைகளையே முன்னுக்கு கொண்டு வரமுடியாதபடி திண்டாடுவார்கள். படித்து உயர்நிலையில் வாழ்ந்து வரும் பிள்ளைகளை நம்பவும் முடியாமல் எந்த விதமான உதவியையும் கேட்டு பெறமுடியாமல் கஷ்டப்படுகிறார்கள். படித்த ஆனால் தனக்குதவாத பிள்ளைகள்,மற்றும் தங்களிடம் பணமிருந்தும், மகிழ்ச்சியை அடையவே முடியாதபடி இருக்கும் பெற்றோர்கள். உத்தியோகத்தில் இருந்தும், விவாகம் முடிந்தும் தன் மணவாழ்க்கையை சரியானபடி வாழத்தெரியாத பிள்ளைகள், நல்வாழ்க்கையை அடைந்தும் அனுபவிக்க முடியாதவர்கள் இப்படியாக வித, விதமான கோளாறுகளுடன் வாழ்க்கை என்னும் வண்டியை எப்படியாவது இழுத்துக்கொண்டு போகலாம் என நினைத்தாலும், தள்ளுவது பிரம்மபிரயத்னம் என நினைத்து வாழும் மனிதர்களை காணும்போது பரிதாபமே ஏற்படுகிறது. ஆனாலும் மனித வாழ்வில் திருப்தியுடன் கரைகண்டவர்கள் மிகவும் குறைவே.
மனிதர்களுக்கு எல்லாவற்றிலும் திருப்தி கிடைப்பது கடினமே. ஆனாலும் அவசரப்பட்டு முடிவெடுக்காமல், நிதானமாக சரியான திசைகளில் நம்மால் இயன்ற வரை பாரபட்சமற்ற முடிவு எடுத்து நிறைவேற்றுவது நல்லது. நாம் எடுத்துவிட்ட முடிவிற்கு நாமேதான் பொறுப்பு என்பதை நாம் உணர்ந்தே செயல்படவேண்டியது மிகவும் அவசியம். முடிவு எதுவாக இருந்தாலும், நல்லதோ, கெட்டதோ நான் முடிவெடுத்தேன் என்ற எண்ணம் தீர்மானமாக இருக்கவேண்டும். பிள்ளைகளின் விவாகம் என்பது முடிந்து விட்டால் பெற்றோர்கள் தங்களுடைய கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள், ஆனால் பிள்ளைகள் பிரச்னைகளை சந்திப்பதே அன்றிலிருந்துதான் என்பதை பெற்றோர்களும் உணர வேண்டும். பிள்ளைகளுக்கு, அவர்கள் எதிர்பாராத சவால்களை எதிர்கொண்டு, சமாளிக்கப்பார்ப்பதில் தான் தோல்வியடையாமல் இருக்கவேண்டுமே என்ற கவலை ஒருபுறமிருக்க, நம்வாழ்வில் பங்கிட்டுக்கொண்டு வாழ வந்தவர்களை,
அன்புடனும்,பண்புடனும் நடத்துவதற்கு தனி மனிதநேயம் மனிதர்கள் மனதில் உதிக்கவேண்டும். காதலன்,காதலி என்னும் உறவு வேறு, கணவன்,மனைவி உறவு வேறு. குடும்பத்தின் பொறுப்பை ஏற்காத உறவு முந்தியது, குடும்ப பாரத்தை பற்றி நினைக்காமல்,ஊர்சுற்றுவது, தங்களுக்கு தோன்றியவைகளை செய்துகொண்டு பொறுப்பேற்காமல் சுற்றிய மட்டும் இருந்த அந்த குதூகலம் மறைந்து, கோப,தாபங்கள் உருவெடுக்கும் சமயம்தான் உண்மையான குடும்ப வாழ்வு ஆரம்பிக்கிறது. வீட்டில் வேலைசெய்ய சோம்பல் பட்டுக்கொண்டு பொறுப்பை ஏற்றுக்கொள்ளாது, நாட்களை தள்ளுவது அத்தனை நல்லவைகள் அல்ல. பொறுப்பற்று ஊர் சுற்றுவது உண்மையான வாழ்க்கையல்ல. அவனே கணவணான பிறகு அவனுடைய எதிர்பார்ப்புகள் வேறாகவே இருக்கும். பெண்மணிகளோ இன்னொரு குடும்பத்தையும் தன்னுடையதாக நினைத்து, ஏற்றுக்கொண்டால்தான் வாழ்வில் மலர்ச்சி ஏற்படும். நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையும், தனக்கென்றில்லாமல் செய்யவேண்டியவைகளை செய்துவிட்டு , நல்லபடியான ரிஸல்ட் வரவேண்டுமென்று காத்திருக்கவேண்டும். எல்லாமே நல்லவித்த்தில் முடிந்து விட்டால் பங்கிட்டுக்கொண்டவர்களின் நற்குணங்களினால்தான் என்றுதான் குடும்பத்தினர்கள் கூறிக்கொள்வார்கள்.ஆகையால் புருஷன் வீட்டிற்கு வந்து பங்கேற்கும் உத்தமிகளுக்கு தன்னலம் என்பதே இருக்கக்கூடாது. நாட்டிற்காக தியாகம் செய்தவர்களுக்கு சர்க்கார் அவார்டு கிடைப்பதுபோல், குடும்பத்திற்கு சேவை செய்வதற்கு அவார்டு எதுவும் கிடைக்காது. நன்றி சான்றிதழ் கிடைக்காது. ஓரளவுக்கு நம் மனசாட்சிக்கு திருப்தி ஏற்படும், அதற்காகவே பாடுபடுகிறோம் என்னும் உண்மையை உணர்ந்தே செயல்படவேண்டும். எதிர்பார்த்து ஏமாற்றமடைய வேண்டாம். இதுதான் சராசரி மனிதர்களின் வாழ்வின் நிலை.
Leave A Comment