உனக்கென்ற வாழ்வு எதுவென்று நினைத்தாய்? அது கிடைக்காது என்று தெரிந்தும்,எதிர்பார்த்தாயா?
எவராலும் உன்னை திருப்தி செய்ய முடியாதென்று தெரிந்துமே, ஏக்கமெதற்கு?
ஆவலுடன் ஓடியாடி உன்னுடைய உலகை தனக்குள் பெரிது படுத்திக்கொள்ளப்பார்,
காலம் ஓடிவிட்டால், கலங்கியபடி நிற்க நேரும் போது உத்தமர்கள் கூட உன்னைத்தவிர்ப்பார்கள்,
எத்தனை காலம் தவமிருந்தாலும் உனக்கு விதித்திருப்பதே உன்னிடம் வரும்,
உலகை கண்விழித்துப்பார், உன்னைவிட கீழ்நிலையில் வசிப்பவர்களின் அவலநிலையை பார்,
ஆசை என்ற ஊற்றுக்கு அணை கட்ட பார், அவசியமற்ற நிலையை அழைக்காதே,
அவஸ்தையையும் அழைக்காதே, ஆரவாரமற்ற வாழ்வே ஆனந்தமளிக்கும், என்ற உண்மையை புரிந்துகொள்.
Leave A Comment