இந்த உலகத்தில் பிறந்திருக்கும் இனங்களிலேயே மனித இனம்தான் உயர்வானது என்பதை கேட்பதற்குத்தான் நன்றாக உள்ளது. இந்த சாதாரணமனித இனம் அசுரத்தன்மையை அடைந்து வேண்டாத வேலைகளை செய்வதை படிக்கும் நேரத்தில் மனம் களைப்படைந்து என்று அழியும், இந்த இனம் என நினைக்க வைக்கிறது.மனிதனுக்கு இத்தகைய வெட்கமின்மை ஒருசிலர் மனதிற்குள் எப்படி புகுந்திருக்கும், என்றெல்லாம் நினைத்துப்பார்த்தால், விடை கிடைப்பதில்லை. எதையுமே அடிக்கடி பார்ப்பதும்,கேட்பதும் அதைப்பற்றியே,யோசிப்பதும்தான் காரணம். கொலை என்னும் கொடிய செயலை எடுத்துக்கொண்டால்,அடிக்கடி வெட்டு,குத்து, கொலை யாவற்றையும் சினிமாவில் பார்த்துவரும் நமக்கும் ப்பூ.. இவ்வளவுதானே கொலை செய்வது மிகவும் சுலபமாக செய்து முடிக்கலாமே என்று தோன்ற ஆரம்பித்து விடுமோ என்றே தோன்றுகிறது. எதையுமே செய்தபின்தானே பின் விளைவுகளை அனுபவிக்கிறோம்.
பக்குவப்படாத மனது எதை அடிக்கடி பார்க்கிறதோ, பேசுகிறதோ அதுமாதிரியாகவே அந்த சஞ்சலப்பட்ட மனது நடந்துகொள்ள ஆரம்பித்து விடுமோ என்றே தோன்றுகிறது. மனதில் கல்மிஷமல்லாதவர்களுக்கும், விபரீத சிந்தனைகள் தோன்ற ஆரம்பித்துவிட்டால், பின் விளைவுகள் விபரீதமாகவேதான் முடியும். ஒரு குடத்தில் நிறைந்திருக்கும் பாலில் ஒரு கரண்டி விஷம் போதுமே, குடம் பாலை விஷமாக்குவதற்கு. தனக்கென்ற மரியாதையையும், தனக்குள்ள பெருந்தன்மையையும் சுய மரியாதையையும் மனிதன் இழந்து விட்டால் சமூகம் ஒதுக்கவே ஆரம்பித்து விடும், பின்னர் அவன் எங்கு போய் நிற்பான்? ஆனால் அதையும் மீறி தன்மானத்தையும் இழந்து விட்டான் என்றால், அவன் தானாகவே தன்னை குறுக்கி கொண்டுதான் வாழ ஆரம்பித்தாக வேண்டும். சமூகம் மன்னித்தாலும் ஆண்டவன் மன்னிக்கமாட்டான்.அவரவர் செய்யும் தவறுகளுக்கு அவரவர் எண்ணங்கள்தான் காரணம்,வெளியுலக நடப்பினால்என்று குறை கூறுவது தவறான செயலாகும். நம்மனதை நம்மால் அடக்கிஆள முடியாது என்றால் யார் பொறுப்பை ஏற்பார்கள்? நமது பொறுப்பற்ற நடப்பும் செயல்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் நாம்தான் பொறுப்பை ஏற்க வேண்டும்.
Leave A Comment