எனது மூத்த சகோதரி சுமார் 45 வருடங்கள் முன்பு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அவளுடைய முதல் வருகை வட இந்தியாவிற்கு. வடநாட்டினரின் மொழி ஹிந்தி என்று தெரிந்தும் என் அக்காவிற்கு எல்லாமே புதுமையாவும் அவர்கள் நடை,உடைபாவனைகளைப்பற்றியும் வேடிக்கையாகவும் இருந்தது. அவருக்காக காபி சுட வைக்க நான் சமையலறைக்குள் போயிருந்த சமயம் நம்வீட்டிற்கு , வீட்டு சொந்தக்காரி வந்திருக்கிறார், அக்கா வாங்கோ,வாங்கோவென்று அன்புடனும் ஆவலுடன் நல்வரவு கூறியது, எனக்கு காதில்கேட்டது, நமக்கு தெரிந்தவர்கள் யாரோ வந்திருப்பதாக நினைத்த நான் நான்கு காபி எடுத்துக்கொண்டு போனால், நம் வீட்டுக்காரியைப்பார்த்து என்சகோதரி கூறினார், பாவம் இந்த மாமி, ஊமை போலிருக்கிறது, நான் கேட்டது காதில் விழாத காரணத்தினால் எனக்கு பதிலே கூற முடியாது சிரித்துக்கொண்டே உட்கார்ந்திருக்கிறார், பாவம் ,என்று கூறியதும் எனக்கு என்ன பதில்சொல்வதென்று புரியாமல் விபரத்தை சொன்னேன்,அக்காவிடம். உடனே வீட்டுக்காரி உங்கள் அக்கா என்ன சொல்கிறார் எனக்கேட்டதும், இதோ வருகிறேன், காஸில் ஏதோ வைத்திருப்பதாக ஒரு பொய்யைக்கூறி என்ன சால்ஜாப்பு சொல்லலாம் என யோசிக்க உள்ளே ஓடினேன். அவசரமாக திரும்பவந்து வாடகையை கொடுத்து பேச்சை மாற்றி அந்த அம்மாவை அனுப்பிய பிறகுதான் நிம்மதி அடைந்தேன்.