ஒரு காலத்தில் அம்மா என்றால் உடல், மனம் பூரித்த அந்த காலம் போய்,அம்மா என கூப்பிட,
வாய்கூசி நிற்கும் பிள்ளை நமக்குத்தேவையா? ஆபீஸில் அதிகார ஆட்டம் காட்டும்
அதே பிள்ளை, வீட்டில் கூசி நிற்பதின் மர்மம்தான் என்னவோ? பயமென்பதே,
தெரியாத அவன் பயப்படுகிறாற் போல் வேஷம் எதற்காக போட வேண்டும்,
சமயத்தில் பரிவு காட்டத்தெரியாதென்றால், சாமர்த்தியம் இருப்பதும்,
இல்லாதிருப்பதும் ஒன்றுதான்.பெண்ணுக்குள்ள அழுத்தமும்,ரகசியசக்தியும் ஆணுக்கில்லை.
கபடமனம், ஒளிக்கவும்,ஒழிக்கவும் காலம்,நேரம் பார்க்கும்,பார்த்துக்கொண்டேயிருக்கும்,
மணமாலை போட்டுவிட்டால் ரத்தபந்தத்திற்குள்ள பிணைப்பு வராது. என்னதான் இறுக்க
கட்டி பிடித்தாலும், உள்ளத்தில் கள்ளமிருந்தால் மனது ஒட்டாது. ஒட்டாத மனதை
ஒட்டவைக்கமுடியாது. தள்ளி நின்றேயாகவேண்டுமென்ற கட்டாயம் வரும் நேரம் இதுதான்.
பெற்றோர் என்பது ரத்தபந்தத்தினால் மட்டும்வந்த பிணைப்பில்லை. ஒரு உயிரிலிருந்து
இன்னொரு உயிர் வளர்ந்து வந்த பிணைப்பு.எதையும் எதிர்பார்க்காமல் தங்கள் உயிரிலிருந்து
உருவானதற்கு உயிரைக்கொடுத்த பிணைப்பை,இழந்து விடாதே!!
மோதிரம்மாற்றிக்கொண்டு, கழுத்தில் தாலியை முடிந்து வந்த பிணைப்புக்கள்,
ஒன்றையொன்று சார்ந்து நிற்கும் பிணைப்பு என்பதை மறந்துவிடாதே !!
அந்தந்த உறவுகளுக்குள்ள முக்யத்துவத்தை புரிந்துகொள்வது முக்யமே.
அர்த்தத்தையும் புரிந்து கொள்வது அவசியமே.
நம்க்கு கடினமான காலம் வரும் போது,தெய்வத்தை கும்பிடும் போது என் அருமை சிநேகிதியே,என்னருமை மனைவியே, என் மரியாதைக்குள்ளகணவனே, என்னைகாப்பாற்று என்றா கேட்கிறோம்,கிடையாது. அம்மா, தாயே எனக்கு வழிகாட்டு, காப்பாற்று என்றுதானே நம்மையும் அறியாமலே உளறுகிறோம்.
பெற்றோர்கள் என்கிற ஜீவன்களை பராமரித்து பார்த்துக்கொள்ளவேண்டும். அவர்கள் மறைந்தபின் செய்வதைக்காட்டிலும் உயிரோடு இருக்கும்போது மனம் புண்படாமல் பராமரித்து கவனித்துக்கொள்ளுங்கள்.