முற்காலத்தில் கல்யாணம் என்றாலே முதல்கேள்வி வரதட்சணையாக எத்தனை கேட்டார்கள், எத்தனை எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் கேட்பார்கள். நிறைய கல்யாணங்களில், பிள்ளைவீட்டார் என்றாலே வரதட்சணை பிசாசுகள், என்றுதான் செல்லப்பெயர் சூட்டிவைத்திருப்பார்கள்.
இன்றைக்கு பெண், தான் மணக்கப்போகும் பையனை தன்வீட்டிற்கு அழைத்துப்போய் அவன்தான் தனக்கு ஏற்றவன் என தன் குடும்பத்தாருக்கு அறிவித்த பின் பையனுக்கு தைர்யம் அதிகரித்து, தானும் ஒருநாள் அழைத்துப்போனால், அன்றைக்குப்பார்த்து அவனுக்கு ஜாதகபரிவர்த்தனைக்காக அவனுடைய அப்பாவின், சிநேகிதருடைய, சிநேகிதர் வந்து அவனுடைய வீட்டில் உட்கார்ந்து கொண்டு காபி டிபன் ஆகிக்கொண்டிக்கும். பிள்ளை, தான் ஆபீஸ் வேலையாக உடனே வெளியில் போகவேண்டும், தன்னுடன் வந்திருப்பது தன்னுடைய ஆபீஸில் வேலை செய்பவர் என அசடு வழிந்து உடனுக்குடன் வெளியில் ஓடிவிடுவான்.
இரவு வீட்டிற்கு வந்த பின், பெற்றோரிடம் இவன் ருத்ர தாண்டவம் ஆடினாலும் அவனுடைய சிநேகிதி அவனிடமிருந்து விலகியே விடுவாள், அப்படியே கல்யாணமாகிவிட்டாலும், உன்னால் உன்பெற்றோர் எண்ணங்களைக்கூட தெரிந்துகொண்டு செயல்படாதவன் உனக்கு யாரைப்பற்றியும் புரிந்து கொள்ளமுடியும், என்றெல்லாம் அடிக்கடி சாடுவாள். இந்தமாதிரி சிலருக்கு வாழ்க்கை அமையும் சமயம் சுனாமிகாற்று அடித்து விட்டாற்போல் போல்தான் ஆரம்பிக்கிறது. அதனால் என்ன? நம்மை நாமேதான் சுதாரித்துக்கொண்டு வாழ கற்றுக்கொள்ளவேண்டும்.பெண்களுக்குள்ள அசாத்தியமான சாமர்த்தியம் ஆண்பிள்ளைகளுக்கு கிடையாது. விஷயங்களை ஒரே கோட்டில், நேராகத்தான் பார்ப்பார்கள். மாற்றிப்போட்டு, மடக்கிப்போட்டு பார்ப்பவர்கள் ஆண்களில் குறைவாகவே காணப்படுகிறார்கள். இதனால்தான் நிறைய கேஸ்களில் தோல்வியை காண்கிறோம்.
Leave A Comment