ஆண்டவன் யாருக்கு, என்ன தண்டனை விதித்துள்ளானோ நம் ஆயுளில் அது கிடைத்தே தீரும். உயர்குலம், தாழ்ந்த குலம் ,பணக்காரன், பிச்சைக்காரன் என்றெல்லாம், மனித மனம்தான் நினைக்கிறது. ஆண்டவன் கோர்ட்டில் எல்லாவற்றையும் அளிக்கும் அல்லது பறிக்கும் உரிமை அவனுக்கு மட்டுமே தீர்ப்பளிக்கும் சக்தியுள்ளது. நம் மனம் எதையோ நினைக்கிறது, கைகள் வேறு ஏதோ செய்கிறது , நம் மனம் போன போக்கில் சென்று உலகமெல்லாம் ஒரு சுற்று, சுற்றி விட்டு வந்து உட்காரும் போது உடனே எங்கேயோ தாவப்பார்க்கிறது . நம் உடம்பில் இருக்கும் இந்திரியங்கள் நம்பேச்சுக்களை உதறித்தள்ளுகிறது. எத்தனை மெத்தப்படித்திருந்தாலும், பணத்தை சம்பாதித்து மூட்டையில் வைத்திருந்தாலும் கைகள் நடுங்கும் போது அடிமை, அடிமையேதான் என்பது புரிய வரும். இந்த ஞானம் எவர் தயவும் வேண்டாமென வாழும் சமயங்களில் நம் புத்தியில் தோன்றியதேயில்லை. ஆடிப்பாடி, இந்த உடம்பில் ரத்தம் சுண்டி, ஆயாசம் மிகுந்து, தோற்றுப்போய், கேட்க நாதியில்லாமல், தலையில் கைகள் வைத்து உட்காரும் சமயங்களில், நாம் வளர்த்த மாடு நம்மை எதிர்த்து, முட்டி,தூக்கி எறிந்து விடும் சமயத்தில், எதுவும் புரியாமல் முதலில் மனம் தொய்ந்து போன உடல், விழப்போகும் நேரத்தில் நான் என்ன பாவத்தை செய்தேனோ என அலட்டிக்கொண்டு புலம்பும். எமனுக்கு தெரியும், யார் உயிர் எப்போது, எப்படி பிரியவேண்டும் என்று. அவனுக்கு மேலிடத்திலிருந்து வரும் ஆர்டர்படி அவன் வந்து நம்மிடமுள்ள காற்றை, பங்க்சர் செய்துவிட்டுப்போவான். கண்ணுக்கு தெரியாத அந்த மூச்சுக்காற்றுக்கு ஆண்டவன் எத்தனை சக்தியை கொடுத்திருக்கிறான். அப்போதுகூட நமக்கு, நம்மை பெற்ற தாய்மார்கள் நம்மை இந்த உலகில் கொண்டுவருவதற்கு, எப்படி தவித்திருப்பார்கள் என்று தோன்றுவதில்லையே . இந்த உலகமே தன்னுடையது போல பாவித்து வாழ்ந்தோமே ஏதாவது வருமா, நம்மைக்காப்பாற்றி பழைய நாட்களுக்கு அழைத்துப்போக…உண்மை இதுதான், இந்த சமயம்தான் நம்முடையது…..அனுபவித்துப்பார்த்து மன்னிப்பு கேட்க…..
Leave A Comment