இப்போதெல்லாம் நம் குல கோத்திரத்தை விட்டு வெளியில் மணம் புரிவது என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. இந்த கல்யாணங்களில் ஒரு விசேஷமான நல்லதன்மை என்னவென்றால் , அனாவசியமாக தகராறுகளுக்கு இடமில்லாது, வெளியில், தெரியப்படுத்தி, மனகிலேசத்தை உண்டாக்கிக்கொள்ளாமல் ,அவரவர்களே தீர்த்துக்கொண்டும், சமாதானமும் அடைந்து விடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கல்யாணத்திற்கு முன்னரே இரண்டு குடும்பங்களுக்கும் பிடிக்காதிருந்தால் சிநேகம் முறிந்து விடலாம். ஆனால், தங்களுடைய தகராறுகளை தாங்களே தீர்த்துக்கொள்ளவேண்டும் , என்ற கட்டாயம் ஏற்பட்டால் தானாகவே யோசித்து செயல்படுவோம் என்பது நிச்சயமே. நாம் எந்த இடத்தில் எப்படி பழகி, தன்னை அந்த சூழ்நிலைகளுக்கேற்றாற் போல் சரிசெய்து கொண்டு வாழ பிள்ளைகள் கற்றுக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம் என்பதை பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு உணர்த்தவேண்டியது இன்றியமையாதவையே..
ஆனால் உடைகளை மாற்றி, மாற்றி அணிவது போல வாழ்க்கைத்துணையை மாற்றிக்கொள்ளும் பழக்கம் நம் தேசத்தில்இல்லையென கூறமுடியாது. ஒளிந்து,மறைந்து என்னவெல்லாமோ நடந்து கொண்டிருக்கின்றன. மனித இனமே உயர்ந்தது என கேட்டு மகிழ்ந்திருந்த காலம் முடிந்து, மனித இனம் எந்த லெவலுக்கு வேண்டுமானாலும், தாழ்ந்து விடலாம் என்ற நிலையில்தான் நிற்கிறோம்.எந்த திசையிலிருந்து பார்த்தாலும் ஒரே கோணம்தான் காண்கிறது உண்மையே. உலகமே மாறி வரும் சமயத்தில் நம்மைப்போன்றவர்கள் தறிகெட்டு ஓடுவதற்கு காரணம் இல்லாமலில்லை. சமய சந்தர்ப்பங்கள் மாற்றியமைத்தும் கொடுக்கிறது. தோல்வியை சந்தித்தவர்களுக்கு இது ஒரு வரபிரசாதம் போல் உள்ளது. ஆனால் எதுவரை என்பதே கேள்விக்குறி ?
அந்தநாளில் ஆங்கிலேயர்களை கிண்டல் செய்தது ஒரு சிலருக்கு நினைவிருக்கலாம். உன் மகளும் , என் மகனும் ஒன்று சேர்ந்து விளையாடுகிறார்கள் எனக்கூறி மகிழ்வார்களாம். அப்போது தெரியாது விளையாடும் பிள்ளைகளுக்கு, அப்பாவின் மகனும், அம்மாவின் மகளும் மணவாழ்க்கையில் ஒன்று சேர்ந்து விட முடியலாம் என்று.
Leave A Comment