காலங்கள் மாறி விட்டதால் , மனித மனம் மாறிவிட்டன என பேசிக்கேட்கிறோம். மன அமைதியை பணயம் வைத்து காலத்தை மாற்றுபவர்கள் நாமேதான். எதற்காக மாற்றப்பார்க்கிறோம், ஏன் மாற்றுகிறோம்,  எதுவுமே நமக்குத் தெரியாது . ஆனால் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் தமக்கு பிடித்தோ பிடிக்காமலோ. ஓடிக்கொண்டேயிருக்கிறது. ஆனால் நாம் ஓட வைக்கவில்லை, என்பது நிச்சயம். முன்காலத்தில் பெரியவர்களுக்கு மதிப்பு  அதிகமாக கொடுப்போம். புத்தகப்படிப்பு எதற்கு உதவுமோ, அதற்கு மட்டும்தான் உதவும். அனுபவப்பட்டு முதிர்ந்த அறிவானது, எந்த உறவையும் முறித்துக்கொள்ளாமல் ஒதுக்கி, ஒதுங்கி வாழ வழி தேடி , வாழவும் வைக்கும் என்பதையும் உணரவேண்டும். அந்தக்காலத்தில், பெரியவர்களுக்குத்தான் விஷயங்கள் அதிகமாகதெரியும் என நம்புவோம். பெரியவர்களும் தங்களை உயர்வாகவே நினைத்தும், பேசுவார்கள் . ஆனால்,இன்றைய பிள்ளைகளுக்கோ ‘லாஜிக்’வேண்டும்,  எல்லாவற்றிற்கும். இன்றைய பிள்ளைகளுக்கு உண்மை நிலையை எடுத்துக்கூறி  எதையும் எடுத்து சொல்லி, கேட்கவைத்து ,  நம்மால் தேற்ற முடியாத கட்டம் வந்துவிட்டது.

இதே போல் வாழ்க்கையை மிகவும் சுலபமாக  ஓட்டவேண்டும். வாழ்க்கை பாதையில் கரடு முரடான சமயம் வந்து விட்டால் விவாகத்தையும், பெற்றவர்களையும் கூட  பொறுத்துக்கொள்ளமுடியாத படி எதையுமே முறிக்க தயார் ஆகி விடுகிறார்கள். அக்னி பகவானை சாட்சி வைத்து ஹோமம் செய்ததின் அர்த்தமென்ன?  லட்சக்கணக்கான பணம் செலவழித்து, நூற்றுக்கணக்கில் மனித கூட்டத்தை கூட்டி, அத்தனை ஆட்களுக்கு மத்தியில் கட்டிய தாலியின் மகிமையை உணராமல், தாலியை  கழுத்தில் மாட்டிக்கொண்டு தனியாக  பிரிவதின் அர்த்தம்தான் என்ன?  காலம் மாறிக்கொண்டே வருகிறது. நம் கடினமான காலமும் மாறிவிடலாமென நம்புவதில்லை என்பதே காரணம்.

தாலி,திருமாங்கல்யம் என்பது  ஒரு  பாதுகாப்பு மாதிரி.  தவறுகள் யாருடையதாக  இருந்தாலும் பேசி சமாதான மனதுடன் அன்புடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். நாம் யாவருமே சாமான்ய மனிதர்களே,  பரம யோக்கியமானவர்களும் அல்ல, உத்தமமான மனிதர்களும் அல்ல என்பதைநினைவு கூற வேண்டும். நாமும் தவறுகள் செய்து விட சான்ஸ் இருக்கிறது என்பதையும் நம்ப வேண்டும். தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதிலும் உண்மையிருக்க வேண்டும். ஆனால் இன்று ஸாரியும் , தாங்க்ஸ்ம் தண்ணீர் பட்ட பாடாக உள்ளன. காலை தவறி மிதித்து விட்டாலும் ஸாரி , கழுத்தை திருகி விட்டாலும் ஸாரி.  உதட்டளவில் கூறிவிட்டு  ஓடிக்கொண்டேயிருப்பதில் ஆனந்தம்காண்கிறார்கள்.  காலை  மிதித்தவரின் பாதத்தை வந்து பார்ப்பார்களா? கழுத்தை திருகி விட்டால் மட்டும் அவர்களை போலீஸ் கவனித்துக்கொள்ளும்.

இன்றைய நாட்களில் எதிலும் எவருக்கும் கமிட்மெண்ட் கிடையாது. வாழ்க்கையின் கோடு நேர்க்கோடாக போய்க்கொண்டிருந்தால், பிள்ளைகள் பிழைத்து முன்னேற முடியலாம் . காலம் மாறவில்லை, குரங்கு மனம் படைத்த மனித  இனம் தனக்கிருப்பதில் இன்பத்தை காணாமல், இங்குமங்குமாக ஒடியாடி அலைந்து திரிந்து  அழிவையே நாடுகிறது.  மனைவியையும் விட்டவனுக்கும், கணவனை விட்டவளுக்கும் சமூகத்தின் ஒரு ஓரத்தில்தான் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றாலும், அவரவர் அனுபவித்த கடினமான சமயங்கள் அந்த அடிபட்ட  மனதிற்கு மட்டுமே தெரியும். இதை  யார் புரிந்துகொள்வார்கள் ? சத்தியமேவ ஜயதே !!