பிள்ளைகளாக, வளரும் பருவத்தில், தன் உடன்பிறப்புகளுடன், வளர்ந்து வரும்போது, உடன் பிறப்புகளையோ, உறவினர்களையோ, இழந்து விடுவோம் என நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். அவர்களுடன் சண்டையும் சச்சரவுமாக அடித்து பிடித்து தங்கள் வேலைகளை சாதித்துக்கொண்டும் விடுவார்கள்.  ஆண்டவன் சந்நிதியில் நாம் யாவருமே அவனுடைய ஆட்சிக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வருகிறோம். நமக்கென்று எது உள்ளதோ அது நம்மிடமேயிருக்கும், என்ற ஒருவித கர்வ உணர்வே காரணம். ஆனால் போட்டிக்கு, ஆசைக்கு இருந்த ஒரு ஜீவனை, அந்த உடன்பிறப்பை இளம்வயதில் இழந்துவிட்டால் அதன் வலி மறக்கவே முடியாது. அது ஒரு உணர்வு அல்ல, உண்மையிலேயே தன் சரீரத்திலிருந்து சதையை பிய்த்து, பிய்த்து போடுவது போலவே  இருக்கும். போட்டிக்கு ஆளில்லாது  தவிக்கும் நிலை அது. போட்டியில்லாத வாழ்க்கை மந்தமாகிவிடும் என்பதே உண்மை.

உண்மையில் தன் வாழ்க்கை என்பதை நன்றாக அனுபவித்து, வாழும் சமயத்தில் நம்க்கு எல்லாமே கிடைத்துவிட்டாற் போல் நினைத்து இறுமாப்பு கொள்கிறோம். ஆனால், வாழ்க்கையின் ரசம் எப்படி உருவாகிறது என புரிவதில்லை, புரிந்து கொள்ளவும் முயன்று பார்க்கவில்லை. வாழ்க்கையில் பறிமாற்றம் அவசியம் தேவைப்படுகிறது. ஆனால் ஒரு சிலருக்கு அதை புரிந்து கொள்வதற்குள் டயமே முடிந்தும் விடுகிறது. மனித பிறவிக்கு மட்டுமே இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி நினைக்கும் சக்தியை ஆண்டவன் அளித்திருக்கிறான். ஆசைகள், விருப்பு, வெறுப்பு எல்லாமே மனித இனத்திற்கு மட்டுமே புரியும். மற்ற உயிரினங்களுக்கு  இந்த சக்தி கிடையாது. மற்ற உயிரினங்களுக்கு  இந்த சுதந்திரமும்  கிடையாது. ஆனால்,இன்றைய உலகத்தில், இத்தனை சக்திகளை வைத்துக்கொண்டும்,  நம்மால் எதுவுமே புரிந்து கொள்ளமுடியாமல் போனால், நம்மிடமே ஏதோ குறைபாடுகள் , எங்கேயோ இருக்கின்றது என்பதையாவது புரிந்து கொள்ள வேண்டும்.

மனித வாழ்வில் சிலவற்றிற்கு முக்யத்துவம் கொடுத்தேயாக வேண்டும். நாம் பெரிய சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம், அதில் வித, விதமான மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள். நம்க்கு பிடித்தோ , பிடிக்காமலேயோ, நாம் நம்மை தயார் செய்து கொண்டு வருவது நலமே. கால, நேரத்திற்கு ஏற்றாற்போல் நாம் யாவருமே ஓரளவுக்கு மாறிக்கொண்டு வருவதே நன்மையை அளிக்கும். அதை  புரிந்து கொண்டு செயல்பட்டால் வாழ்வின் மேடு, பள்ளங்களை தாண்டி போய் வாழமுடியும். ஆனால் இழப்பை சரிக்கட்ட மனது உருகி, உருகியேதான்  தவித்து, தவித்துதான் அடங்கிவிடுகிறது .

வாழ்க்கையின் ஓட்டத்தில், எந்தபிரச்னைகளையும், தாண்டி விட்டோமென நினைத்துஉட்காரும் காலகட்டத்தில்,’ ரொம்பவும் துள்ளாதே ஆட்டுக்குட்டி, என் கையில் சூரிக்கத்தியுள்ளது’ அதை நான் அதை எடுத்து மேல்நோக்கி தூக்கிவிட்டேனானால் உன் துள்ளல் குறைந்து விடும் என ஆண்டவன் நினைப்பாராம். ஆனால் நாம் நினைப்பது என்னவென்றால்,  உலகமே தன்னால் மட்டுமே இயங்குகிறது , என் இஷ்டம் போல் ஆட்டிவைத்து வேடிக்கை பார்ப்பேன்  எனநினைக்கும்சமயங்களில், நம்மை சுற்றியுள்ள துர்தேவதைகள், நாங்களும் காத்திருக்கிறோம், பாடம் கற்பிக்க என கூறுவார்களாம். பிறரை அலட்சியம் செய்துவிடும் மனோபாவம் ஏன் நம்மனதுக்குள் நுழைந்து விடுகிறது? ‘ விநாச காலே விபரீத புத்திதான் ‘ நல்லவர்களையும்கூட கெட்டவர்களாக மாற்றுவதற்கு காரணம், வாழ்வில் சில வெற்றிகளைகண்டவர்களுக்கு, இனிவரப்போகும் நாட்கள் யாவுமே தனக்கு வெற்றியையே தரப்போகிறது என்றதொரு பேதமையான  எண்ணமும் ஒரு காரணம். தன்னால் முடியாதவைகளேகிடையாது என்றதொரு அல்ப எண்ணமும் கூட சேர்ந்து கொள்கிறது. நம் சொந்த வாய்மொழிகளே நமக்கு சத்துருவாகி விடுகின்றன. ஆண்டவன் சிரித்துக்கொண்டே நம் கழுத்தில்  கத்தியை போட்டு கற்பித்தும் விடுகிறான்.