இந்த உலகில் பிறந்த யாவருக்குமே ஒவ்வொரு அபிலாஷை இருக்கும் . எல்லோரும் அவரவர் மனம் போல தன்னைப்பற்றி நினைத்துக்கொண்டு வாழ்கிறோம். நாம் கனவு பல காண்கிறோம். நமக்கு வேண்டியவைகள் கிடைக்க பிரார்த்திக்கிறோம், உழைக்கிறோம். நமக்கு வேண்டியவைகள் கிடைத்துவிட்டால் ஏக்கம் குறைந்து விடுகிறது. ஆனால் மனம் மேலும் ஒரே ஒரு லிஸ்ட் போட துடிக்கிறது. இப்படி நம்வாழ்நாட்கள் முழுவதுமே தேவையானவைகளையே தேடித்தேடி அலைகிறோம். எது கிடைத்தாலும் போதவில்லை. சில ஆசாமிகள் தங்களுக்கு தேவையானவைகள் மிகவும் குறைவுதான் என தம்பட்டம் போட்டு கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் பொய்களை கூறியே தங்கள் மனதை வெளியில் காண்பித்து விடுகிறார்கள். இருப்பவைகளை இல்லையென்று காண்பிக்கவேண்டும், இல்லாதவைகளை இருப்பதாக காண்பிக்கவேண்டும், என்பதற்காக வௌவால் மாதிரி தலை கீழாக தொங்க விட்டு வேடிக்கை காண்பிக்கிறார்கள்.
வெறும் அபிலாஷைகளை வைத்துக்கொண்டு நாம் எங்கும் போய்விடமுடியாது. அந்தந்த சமயத்திற்குரிய வேலைகளையும் சமயத்தில் முடித்து அதற்குரிய சகாயங்களையும் நடைமுறையில் கொண்டு வர பார்க்கவேண்டும். இந்த தில்லுமுல்லு வேலையெல்லாம் சுலபத்தில் நடத்திகாட்டுவதும் எல்லோராலும் முடியாதவைகளே.
Leave A Comment