பிறவியிலேயே மனித பிறவிதான் உயர்ந்தது என்னும் முற்காலத்தில் கூறுவார்கள். ஆனால் அந்த சொல்லில் நம்பிக்கை போய் வருகிறது. இன்னம் ஈரேழு ஜன்மத்திற்கும் மனிதர்களாகவே பிறக்கக்கூடாது என நினைக்கும் சமயம் வந்து விட்டது போல எங்கு திரும்பினாலும் நிம்மதி கலைந்து வருகிறது. பிள்ளைகளுக்கு படிக்கவேண்டாம், ஆண்களுக்கு புத்தி வேறு மாதிரி மாறிக்கொண்டு வருகிறது, பெண்மணிகளுக்கு முழுக்க, முழுக்க விடுதலை கிடைத்து விட்டது. ஆகையால், எதிலுமே ஈடுபட்டு முன்னேற முடியாத நிலைமை. மனதார ஒத்துக்கொண்டு வாழமுடியாத  பெற்றோருடன் வாழ்ந்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு , எதிலுமே  பற்றில்லாமல் வளர்ந்து வரும் ஆண் பிள்ளைகள். ஏனென்றால் பெற்றோர்கள் பிள்ளைகளின்   மனதில் அவர்களுக்கு எது பிடித்த படிப்பு என்றெல்லாம் கேட்பது கிடையாது.  மந்திரி, தந்திரிகளிடம் பேசி  செட் செய்து வைத்துள்ளேன்,   சும்மா  பெயருக்காக ஒரு டெஸ்ட் வைத்து விட்டு உன்னை செலக்ட் செய்துவிடுவார்கள் என கூறி தைர்யம் கொடுத்து, வருங்கால மன்னர்களுக்கு, என்ன செய்ய வேண்டுமென்பதே புரியாமல் ஆகிவிட்டது.  சாவி கொடுத்து ஆடும்  பொம்மைகள் ஆகி விட்டார்கள், பிள்ளைகள்.

அவர்களாகவே ஓடியாடி, தனக்கு என்ன பிடித்துள்ளது என நினைக்காமலும், அவரவர் சுவாரஸ்யத்திற்கேற்ற படிப்பையும் படிக்க விடாமல், என்ஜினியரிங் படித்தால்தான் முன்னுக்கு வரமுடியும், பணம் சம்பாதிக்க முடியும் என்ற ஒரே நோக்கத்துடன் பெற்றோர்கள் பிள்ளைகளை படிக்கவும் வைத்து விட்டு பிள்ளைகளின் மனதை நோக அடித்து, கைதிகளைப்போல் நடத்துகிறார்கள். பிள்ளைகளை உலகத்தின் எந்த மூலைக்கும் அனுப்ப தயார், எத்தனை செலவானாலும் செலவழிக்க தயாராகவும் உள்ளார்கள். ஒரு  குருடனை  மஹாராஜாவின் கண்டிப்பு கலந்த கண்கள் மூலமாக பார்ப்பது போல் , போஸ் கொடு,  போட்டோ எடுக்கவேண்டும் எனக்கூறுவது மாதிரியே உள்ளது. அவரவர்களுக்குள்ள உள்ள புத்தி சாதுர்யத்தை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு பிடித்த  படிப்பை படித்து, அவர்கள் முன்னுக்கு வர கற்றுக்கொள்ளவேண்டியவைகளை கற்றுக்கொண்டு , உல்லாசமாக  வாழ்ந்து, இளம் வாழ்க்கையை அனுபவிக்கவிடாமல் பிள்ளைகளின் மனதை முறித்து போட்டு விடுகிறார்கள்.

பெற்றோர்களின் கனவு படிப்பை, படிக்கவேண்டுமென வற்புறுத்தி படிக்க வைத்து பிள்ளைகளின் வாழ்க்கையிலும் சோகத்தை அள்ளி வீசுகிறார்கள். திரும்பிய இடமெல்லாம் இன்ஜினியர்கள். இன்றைய நிலையில், இன்ஜினியரிங் படித்தால்மட்டும் போதாது என்றும்தெரிய வருகிறது. ஆகையால் எந்த இன்ஜினியரிங் கோர்ஸுடன்  என்ன  மாதிரி எம்.பி. ஏ படிக்கவேண்டுமோ அதையும் படிக்கிறார்கள். படிப்பை முடித்து விட்டவுடன் வேலை தேடும் அத்தியாயம் ஆரம்பித்து விடுகிறது.  வேலையும் தனக்கு, நிரம்ப படித்துவிட்டபடியால், தேடி பொறுக்க வேண்டியும் உள்ளது.

சாதாரண இன்ஜினியர்களின் வேலைகளில் மனம் செல்லாது. ஆனால் முதல் முறையாக தன் படிப்பிற்கேற்ற  வேலை கிடைக்காவிடில் மனம்உடைவது நிச்சயமே. ஆனால் எதற்குமே கவலைப்படாமல், நம் கண்ணோட்டத்தில்  நமக்கு தகுதியான வேலை இதுதான் எனதோன்றியவுடன் அந்த வேலையில்  சேர்ந்துவிட வேண்டும், என்ற ஒரு கட்டாயம் வந்தே விடுகிறது. வந்த வேலையை உதறி தள்ளினாயே எனகேட்டுக்கொள்ளவேண்டிய கட்டாயம் வந்துவிடுமோ என்ற பயம் வேறு.  இப்படி பலவிதமான  மன வில்லங்கங்களில் மாட்டிக்கொண்டு  பதில் கூறும் நிலைமை வந்துவிடுமோ என்ற பயம் வேறு உந்துதள்ளும். இப்படியாக படிப்பு என்கிற ஒரு அத்யாவசியமான ஒன்று மனிதர்கள் கைகளில் மாட்டிக்கொண்டு திண்டாடுகிறது இன்றைக்கு.