மனிதர்களாகிய நாம், வாழ்க்கையில் உபயோகமாக இருந்தவைகளை நினைத்து பார்பதைவிட, உபயோகமற்றவைகளையே நினைத்து வருந்துகிறோம். நிறைய குடும்பங்களில், நம் வாழ்நாளில் நம்மிடம் ஆசையாக இருந்தவர்களை அலட்சியம் செய்து விடுகிறோம்.  நமக்கு நல்லது செய்தவர்களை மறந்தும், விடுகிறோம். நமக்காகவே இருப்பவர்களை துச்சமாக நினைத்து  தூக்கிஎறிந்து பேசிவிடுகிறோம். ஏனென்றால்,  இந்த உறவு, நட்பு முறியமுடியாத ஒன்று என தெரிந்தவுடன் இன்னும் அலட்சியம் வருகிறது,  நம்முடையவர்களிடம்  துளி வருத்தம் வந்து விட்டாலும் , அவர்களிடம் பேசி, மன்னிப்புகேட்டோ, பணிவுடன் பேசவோ,  மனத்தையும்  திறந்து கொட்டவோ யோசனைகள் செய்கிறோம். நாம்  நிறைய மனிதர்களை கண்டிருக்கிறோம், தன்னவர்களுடன் நல்வார்த்தைகளே  பேசுவது கிடையாது. ஏனென்றால் தன்னை சார்ந்து இருப்பவர்கள், தன்னை விட்டு விடமாட்டார்கள் என்ற ஒரே நினைப்புதான், காரணம். ஒரிரு தவறுகள் நடந்திருந்தாலும் அதை மறந்து விட்டு பேசி,  உடைந்த உறவை புதுப்பித்துக்கொண்டு வாழ்வது  என்பது, மனிதர்களாக பிறந்துள்ள நம்க்கு மட்டுமே சாத்தியம், என்பது புரிந்தாலும்,  கர்வம் பிடித்து ஆட்டுகின்ற மனிதர்களுக்கு எவருமே லட்சியமில்லை.

வயதானவர்களை கண்டால் மிகவும் அலட்சியமாக பார்ப்பார்கள். அவர்கள் பிறந்த சமயத்திலேயிருந்தே, தள்ளாடிக்கொண்டா இருந்திருக்கிறார்கள்? கூட பிறந்தவர்களை கிள்ளுக்கீரை மாதிரி கிள்ளி எறிந்தும் விடுகிறார்கள்.  தங்களுக்கும் இதே நாட்கள்,  வருவதற்கு  நம் பின்னாலேயே காத்து நிற்கின்றன என்பதே புரியாமல், இந்த ஆட்டம் போடுகிறார்கள். இத்தகைய சுபாவம் ஏழைகளிடம் மட்டும் உள்ளது என்று கூற முடியாது.  கொழுத்த பணம்படைத்தவர்கள்  மனதிலும், இந்தமாதிரியான அவகுணங்கள் தலை தூக்கி நிற்கின்றன. பணம் நம் கைகளை பிடித்து தூக்கி விடுமா, நமக்கு ஒரு வாய் தண்ணீர் கொடுக்குமா?  தங்கத்தில் செய்த ஊசியானாலும் அதற்கு என்ன உபயோகமோ, அதற்குமட்டுமே நாம் அதை உபயோகப்படுத்த முடியும். மனிதர்களுக்கு  நேரங்களே, பாடங்களை கற்பித்துக்காட்டும். மனித மனங்கள், நேரங்களுக்கு ஏற்றாற்போல் போல் மாறி விடுவதையும் கண்டிருக்கிறேன்.

மிருகங்கள், தங்கள் சாப்பாட்டிற்காகவே  வேட்டையாடப்போகும்.  பசியே இல்லாத மிருகம் படுத்தே  கிடக்கும். மனிதர்களாகிய நாமும், நம்மால் முடியாத வேலைகளை சாதித்துக்கொள்ளவே, பிறரை சந்திக்க  நினைப்போம். இந்த இரண்டின் சுபாவத்திலும் வித்தியாசங்கள் நிறைய கிடையாது, என்றே நான் நினைக்கிறேன். ஆனால் மனிதர்களுக்கு  அவரவர்க்கென்று அமைந்திருக்கும் பிறவி சுபாவம் மாறாது என்பது உண்மையே.