அடிமை என்றால் என்பதே குடி, கூத்து , இவைகளை உயிருக்குயிராக நேசிப்பது, அடிமையாக இருப்பது மட்டும்,அடிமைத்தனம் என பலர் நினைக்கிறார்கள். ஆனால் சினிமா பார்க்காமல் வாழ முடியாது, டிவி என்ற சாதனத்தை திறக்காமல் சாப்பாடு உள்ளே போகாது பலருக்கு, காபி குடிக்காமல், வாழமுடியாது பலருக்கு. தயிர் இல்லாமல் சாப்பிட்ட சாப்பாடு ஒரு சாப்பாடேயில்லையென கூறுவார்கள், சிலர். தேத்தண்ணீர், குடிக்காமலிருந்தால் தன் மண்டை வெடித்துவிடுமென்பது போல பேசுவார்கள் பலர். இவர்கள் கூட அடிமையானவர்கள் என்றுதான் கூறுவேண்டும். அடிமை என்றால் கூலி வாங்கி பிழைப்பது மட்டுமில்லை. எதை நம்மால் விடவே முடியாதோ அதற்கு நாம் அடிமையாகி விட்டோம் என்றுதான் அர்த்தம். சிலர் அன்பிற்கு அடிமை, மற்றும் பலர் ஆத்திரம், சண்டை, சச்சரவு , கோபத்திற்கு அடிமைகளாகவும் இருப்பார்கள்.
பொறாமைக்கு அடிமையானவர்களிடம் மட்டும், மற்ற மனிதர்கள் அதிஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஏனென்றால் இவர்கள் எந்த மட்டமான நடத்தைக்கும், இறங்கி விடுவார்கள். தங்களுக்கு கிடைக்காதவைகள் பிறருக்கு எப்படி கிடைக்கலாம், என்பதில் தீவிர எண்ணம் கொண்டவர்கள் இவர்கள். நல்லவர்கள் மாதிரி நடித்தே பழிவாங்கிவிடுவார்கள். அவரவர்களுடைய வெளிப்பேச்சுக்கும் உள் மனதுக்கும் சம்பந்தமேயிருக்காது. நடிப்பில் உயர்ந்தவர்கள், இவர்கள். பிறருக்கு குழி பறித்து விடுவதில் சாதனைகள் சாதித்து விடுவார்கள். இவர்களுடைய உண்மையான சுபாவம் யாருக்குமே தெரிய வராது. கபட சன்யாசிகள் எனக்கூறுவதே இவர்களுக்கு பொருத்தமான பெயர் கொடுக்கலாம். நல்லவர்கள் மாதிரி நடித்து பிறரிடமிருந்து அவர்கள் குடும்பத்தின் வரவு,செலவு கணக்குகளை பேச்சுவாக்கில் கேட்பது போல் கேட்டு, உண்மை செய்திகளை கறந்து விட்டு, குழிபறிக்க பிளான் பண்ணும் மஹாபாதகர்கள் இவர்கள். ஆகையால் புராண காலத்தில் மட்டுமே மஹாபாதகர்கள் இருந்திருந்தார்கள் , இப்போது இருப்பவர்கள் யாவருமே நல்லவர்கள் என்ற முடிவுக்கு வரவேண்டாம். எல்லா குடும்பங்களிலும், இம்மாதிரியான எதற்குமே ‘உதவாத உடைந்த கோடாலிகள் ‘ வாழ்ந்து வருகிறார்கள்.
Leave A Comment