ஆதி காலத்தில், ஆண்கள்தான் குடும்பத்தின் மெயின் ஸ்விட்ச்சாக இருந்தார்கள். இந்த வார்த்தைகள் உண்மையாக இருந்தாலும், ஆணின் மனோபலம் இன்றும்சரி, அன்றும் சரி , குறைவாகவேதான் இருந்துள்ளது என்பதை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆண்கள் சரீர பலத்தில் அதிகப்படியாக இருந்தாலும், மனஅளவில் பெண்களை விட குறைந்தவர்களே. ஆனால் இன்றைக்கும் கூட விவாகரத்து வேண்டுமென கேஸ் போட்டு ஜெயித்துவிட்ட ஆண்களுக்கு கூட அத்தனை துணிச்சல் இருக்காது, எத்தகைய துணிச்சல் விவாகரத்தில் தோற்றுப்போன பெண்மணிகளுக்கு உள்ளதோ, அத்தனை துணிவு விவாகரத்தில் வெற்றியடைந்த ஆண்களுக்கு இராது. எந்த வித உயிர் இறப்பின் இழப்பையும், வெகு லாகவமாக கையாளுவதில் தேர்ந்தவர்கள் பெண்மணிகளே என்பதில் சந்தேகமே கிடையாது. வாதத்தில் மிகவும் பலமானது பிடிவாதம்தான். அதில் பெண்மணிகளே தேர்ந்தவர்கள். தான் நினைத்தவைகளை தனக்கு சாதகமான முறையில் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அவைகளை நிறைவேற்றிக்கொண்டும், வாழ நினைப்பவர்கள் பெண்மணிகளே, வாழ்ந்தும் காட்டுவார்கள். மனைவியை இழந்த ஆண்மகனுக்கும், கணவனை இழந்த பெண்மணிகளையும் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த உண்மை , சலனமேயில்லாத ஆற்று நீர் போல புலப்படும் , சாதாரண மனிதர்களுக்கு கூட. இது என்னுடைய ஆராய்ச்சியின் முடிவு பெண்களின் மனோபாவம் பற்றி.
இதற்கு பெண்மணிகளின் கல் மனதுதான் காரணம். பெண்மணிகள் எதையுமே சாதாரண கண்ணோட்டத்துடன் காணவே மாட்டார்கள். எப்பேர்பட்ட விஷயத்திலும் உள்ளே ஊடுருவி சென்று , விஷயங்களின் விபரங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் ஈடுபட்டு விபரங்களை கேட்டு கறந்துவிடுவார்கள். ஒரே ஒரு வம்பு பேச்சை, பல வித கோணங்களில் பார்த்து, கேட்டு, குடைந்து தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி அதனுடன் கொஞ்சம் மசாலா கலந்து வெளியிடுவதில் வல்லவர்கள். ஆண்டவன் இந்தக்காலத்தில் பெண்மணிகளை படிக்கவிட்டு, காரியாலயங்களில் வேலை செய்வதற்கும் வழி வகுத்து கொடுத்தாலும் பெண்மணிகளை மேக்கரித்துக்கொண்டு, ஆண்கள் வரவேண்டுமானால் உடலளவில் பலமும், மனதளவில் கருங்கல்லாகவும் உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும். பெண்மணிகள் பாலைக்கறக்க நாட்டியமாடும் மாட்டை அதனுடன் ஆடி பாலை கறப்பதில், நிபுணர்கள். பாட்டிப்பாடினால் மட்டுமே ஒரு மாடு பால் கறக்குமெனில் எதையாவது, எந்தகுரலானாலும் பாடிப்பாடினால் மட்டுமே கறக்குமென்றாலும் பாட்டுப்பாடி பாலை கறந்துவிடுவார்கள் , அடி போட்டால் தவிர ஒரு மாடு பாலைகறக்காது எனதெரிந்தவுடன், ஒருநாள் போட்ட அடி போல் மறுநாள் இல்லாது, வித, விதமான அடிகளை போட்டு பாலை கறந்தேவிடுவார்கள், என்பதில் சந்தேகமேயில்லை.
இதையல்லாம் நான் எதற்காக எழுதுகிறேன் என்றால், புராண காலத்திலிருந்தே மனித வர்க்கத்தில் , பெண்களுக்கு உயர்வான மதிப்பு உள்ளது, என்பது உண்மையேதான். வாயு மண்டலத்தை கிழித்துக் கொண்டு ராக்கெட்டில் பயணம் செய்த கல்பனா சாவ்லாவை நினைத்துப்பாருங்கள். எந்த வயதில் எத்தனைமனோபலம் அந்த பிள்ளைக்கு இருந்திருக்க வேண்டுமென!! இன்றைக்கு மட்டுமில்லாமல் என்றைக்குமே பெண்மணிகளில் வீராங்கனைகள் வாழ்ந்திருக்கிறார்கள். உயிரை பணயம் வைக்கவும், தயங்கமாட்டார்கள். குடும்பங்களில் கூட வம்பு இழுத்து சண்டைகள் போட வந்தவர்களைக்கண்டு பின்வாங்க மாட்டார்கள். எப்பேர்ப்பட்ட குடும்ப சண்டைகளிலும் , அவர்களே முன்வந்து , முன் வைத்த காலை பின்வாங்காமலே குடும்பங்களை பிரித்துப்போட்டும், விடுவார்கள். ஆண்களுக்கு உடம்பில் பலம் அதிகமாக தெரியும், ஆனால் அவர்களால், பெண்களின் மனோபலத்தை சோதிக்கவும் முடியாது. எந்த வீட்டிலும் பெண்கள் துஷ்டைகளாக இருப்பதே வெளியில் தெரியாத வண்ணம் பொல்லாதவர்களாக இருப்பார்கள். சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்று பேசிய காலம் மலையேறிவிட்டது, ஆறடி ஆண்பிள்ளையானாலும் , மூன்றடிபெண்பிள்ளையாக முடியாது, என்பதே உண்மை.
Leave A Comment