இன்றைக்கும் கூட ஒரு விவாகம் என்பது, ஆயுள் முழுவதும்  பெண்ணும் சந்தோஷமாக வாழ்ந்தும், புகுந்த வீட்டிலுள்ளோரை மகிழ்வுடன் நடத்தவேண்டுமே என பெண்களை பெற்றவர்கள் புத்திமதி கூறி படித்துப்படித்து சொல்லிக்கொடுப்பார்கள் என்பது உண்மையே.   மாப்பிள்ளை வீட்டார் என்ன கூறினாலும், கொஞ்சகாலமாவது மறுத்துப்பேசாமல் அடங்கியிருக்கிற மாதிரி இருக்க வேண்டுமெனவும் புத்திமதிகளையும் கூறுவார்கள். மாமியார், மாமனாருக்கு பேச்சுக்குப்பேச்சு எதிர்ப்பேச்சு பேசாமல் அடங்கினால் போல் கொஞ்சகாலத்தை  தள்ளிவிட்டாயானால், உன் ராஜ்யம் வரும்போது , உன்னால்தான் வீட்டை நடத்த முடியும்  என காண்பித்து விட்டால், உன் கைகள்தான் ஓங்கி நிற்கும் என்றும் சிபாரிசு செய்தும் சொல்லிக்கொடுப்பார்கள். சில கல்யாணங்களில் இந்த மாதிரியும் நடக்கிறது. ஆனால் மனிதர்களின் உண்மை சுபாவம் தெரிந்துவிட்டால், மாப்பிள்ளை வீட்டாரும் உஷாராகி விடுகிறார்கள்.  பிள்ளைகளைபெற்றவர்கள் , பைத்தியமா என்ன? அவர்களும், வந்திருக்கும் பெண்ணை விவேகத்துடன் நடத்தவேண்டும்.

சில வீடுகளில் அசட்டுபெண்ணுக்கு நல்ல பிள்ளையாக கிடைத்து விட்டால் கேட்கவே வேண்டாம். மாப்பிள்ளையின் வீட்டாரின் மண்டையை மழுக்கி ஏமாறவும் வைத்து விடுகிறார்கள். ஆனால் இன்றையநாளில் அவரவர் பிடித்து கல்யாணம் நடந்தாலும், குணக்கேடுள்ள பையனோ, பெண்பிள்ளையிடம்  மாட்டித்தவிக்க போகிறானே என பிள்ளைகளைப்பெற்றவர்களும் பயந்து கொண்டுதான் விவாகத்திற்கே சம்மதம் தெரிவிக்கிறார்கள்.  இப்போதுள்ள பெற்றோர்களும் மிகவும் விசாலமான எண்ணங்களுடன் தயவு தாட்சண்யங்கள் பார்த்தும் தேர்ந்தெடுக்கிறார்கள். இதையெல்லாம் விட,  ஆண்பிள்ளைகள் அண்ணன், தம்பிகளுடன் வளர்ந்தவர்களுக்கு, பெண்களிடம் ஒரு விதமான பாசம் வருவதால் அவர்களை கடுப்பாக நடத்த பிடிக்காமலும் இருப்பதால், பெண்பிள்ளைகள் ஆண்களின் இந்த நடத்தையை, ஆண்கள் பலகீனமானவர்கள் என்றும் நினைத்து மேலும் ஓட்டுகிறார்கள்.

காதல் கல்யாணமோ, பெரியவர்கள் பார்த்து நடத்திய கல்யாணமோ, பெண்ணும், பிள்ளையும்  ஒருவரையொருவர் பிடித்து நடப்பது போல் நடிக்காமல், உண்மையிலேயே நம்வீட்டிற்கு வந்திருப்பவளை நான் நன்றாக வைத்துக்கொண்டு  வாழ்நாட்களை நன்றாக நடத்தி எங்கள்வாழ்நாட்களை  நடத்திக்காட்டுவேன் எனசபதம் எடுத்துக்கொண்டு செய்தும்காட்டவேண்டும். இன்றைய நாட்களில் பெரியவர்களும், மிகவும் அனுசரித்தும், அன்புடனேயும்  தன் வீட்டிற்கு வரும்  பெண்களை நடத்துகிறார்கள், என்பதும் குறிப்பிடத்தக்கது.