பிறப்பும், இறப்பும் கேட்பதற்கு மிக சாமான்யமாகவே இருப்பதாக நினைத்தால், வாழ்க்கையை வாழ்ந்துதான் பார்க்க வேண்டுமென்பதில் எந்த அர்த்தமுமில்லை. போதும் அனுபவித்தது என தோன்றுகிறது. ஏனென்றால் நூற்றுக்கு ஐம்பது ஆட்கள், தங்களுக்கு மறுபிறவியே தேவையில்லை என்றுதான் கூறிக்கேட்டிருக்கிறேன். இந்நாட்களில், சுலபமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் சமயம், எவருக்குமே இன்னொரு வாழ்நாள் எப்படியிருக்குமோ என விசாரம் வந்துவிடுகிறது.
கடினமான, துக்கம் நிறைந்த நாட்களை பார்த்தவர்களுக்கு வரப்போகும் நாட்கள் எப்படியிருந்தாலும் வாழ்ந்தே தீருவோம் என நினைத்து பார்க்கமுடியும் , அல்லது தலைவிதி போல் நடக்கட்டுமே என்று கூறுவார்கள். பலருடைய வாழ்க்கையில் அவர்களுக்கு வேண்டாத மாதிரி வாழ்க்கையின் ஓட்டம் அமைந்து விட்டால் வாழ்வே வேண்டாமென வெறுப்பு தட்டுகிறது. வாழ்க்கை என்னவென்று புரிந்து கொள்வதற்குள், வாழ்வின் கடைசி அத்தியாயத்திற்கு வந்தும் விடுகிறார்கள். காலத்தின் அவலத்தை மாற்றும் நோக்கமிருந்தாலும், முடிந்தால்தானே மாற்றமுடியும்?
எத்தனையோ ஆட்கள் வாழ்நாட்களை எப்படி வாழ்ந்து மடிந்தார்கள் என்றே புரிபடுவதில்லை. ஏதோ காலம் தள்ளவேண்டுமே என நினைத்து காலத்தை ஓட்டியிருக்கிறார்கள். அவ்வளவேதான். கடினமான சமயங்கள் வரும் போது வாழ்க்கையின் நோக்கம் தடைப்படுகிறது. ஆகையினால் நாம் நம்முடைய ரொட்டீன் வேலைகளை செய்துகொண்டேயிருக்கவேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் ஒரு சங்கல்பத்துடன் செய்ய பழக்கி கொண்டு விட்டால்தான் மிகவும் நல்லது. நம் யாவருக்குமேஒரு விதமான ரொடீனை செய்து கொண்டே வந்தோமானால் நமக்கும் நல்லது, நம்மை சுற்றியுள்ளோருக்கும் நல்லதே..
Leave A Comment