வெகு நாட்களாக மனதில் உள்ள உத்வேகத்திற்கு வடிகால் கிடைத்தாற் போலிருந்தது கற்பகத்திற்கு. மனித மனதில் உள்ள வேகத்திற்கு கண்ட்ரோலே கிடையாது என்பது உண்மையாகவேயிருந்தாலும் அவரவர்களுடைய கனவு என்பது பூர்த்தியாகும் வரை மனது தவித்துக்கொண்டேதானிருக்கும் என புரிந்து கொண்டாலும் தேடிக்கொண்டேதான் இருக்கும். நம் மனது நினைத்து கொண்டிருப்பதை பிறரால் அறிவது கடினமான சமாசாரம்தான். தன் உயிர் சிநேகிதர்கள் புரிந்து கொள்ளக்கூடிய சக்தியுள்ளவர்கள், மட்டுமே புரிந்து கொள்ள முடியலாம்.
சிநேகிதர்கள், சிநேகிதிகள் வேறு , நம் உடன்பிறப்புகள் வேறு. சிநேகிதர்களிடம் எது வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் நம் உடன் பிறவாத உறவுகளுடன் ஒரு அளவுக்கு மேல், மனம்திறந்து கொட்டமுடியாது. அடிக்கடி பார்க்கும் உறவுகள் கூட ஒரே தளத்தில் உள்ள நிலைமையில் இருந்து வாழும் போது ஒரு துளி வசதிகள் ஒருவருக்கு அதிகமாகி விட்டால், மன வேறுபாடுகள் வந்து விடுகிறது. மனித மனதிற்கு வாயிலிருந்து வார்த்தைகளை கொட்டியே பழக்கம். வசதி ஏறக்குறைவாக இருந்தால்தான் உயர்மட்டத்தில் உள்ள மேன்குடி மக்கள் போலவே நடந்தும் கொள்வார்கள். பிள்ளைகுட்டி பரிவாரங்கள் இருந்து விட்டால் அவர்களை வேவு பார்க்க வரும் ஒற்றர்கள் மாதிரி நம்பி, நடிக்கவைத்து உறவினர் வீட்டு விஷயங்களை பிள்ளைகள் மூலம் கறக்கப்பார்ப்பார்கள். ஆண்டவன் அவர்களுக்கு அருளியிருப்பதில் திருப்தியில்லை. மற்றவர்களையே பற்றி கருத்தில் நினைத்து மருகிக்கொண்டிருப்பதில் அர்த்தம்தான் என்ன? அவலை நினைத்து வெறும் உரலை இடித்து என்ன உபயோகம் என நினைப்பவர்களும் உள்ளார்கள்.
கற்பகத்திற்கு தன் பெற்றோரை இழந்த துக்கமே தெரியாமல், அவளுடைய சித்தப்பா, சித்தி வளர்த்துக்கொண்டிருந்தாலும், அவ்வப்பொழுது அவளுக்கு தன் பெற்றோர் நினைவு வந்து விட்டால், துக்கத்திற்கு அளவேயில்லாது இருக்கும். பள்ளியில் படிக்கும் சமயம் சக சிநேகிதிகள் தங்கள் பெற்றோர்களைப்பற்றி பேசும் சமயங்களில் அவளுடைய துக்கத்திற்கு அணை கட்டமுடியாமல் பொங்கிவரும். ஆனாலும், யாரிடமும் எதையும் பற்றி பேச பிடிக்காமல், அந்த பேச்சுக்களில் கலந்து கொள்ளமனமில்லாது பள்ளி வேலைகளில் ஈடுபட்டு மனதை மாற்றிக்கொள்ளும் பக்குவத்தை அடைந்திருந்தாள். எல்லோருக்கும் இந்த பக்குவம் வராது. இந்த திறமையை பெற கல்நெஞ்சுக்காரர்களாக இருக்க வேண்டும்.
பள்ளிபடிப்பு முடிந்து, கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து வேலைபார்க்க தொடங்கி, சம்பாதிக்கும் திறமை வந்தபின்தான் மனதில் ஒருஉத்வேகத்துடன் முழு மூச்சாக செயல்பட ஆரம்பித்தாள். தன்னை பற்றிய எண்ணங்கள் தன் சித்தப்பா குடும்பத்திற்கு எப்படி இருந்திருக்கிறது , என புரிந்தவுடன்தான், மனித நோக்கத்தை உற்றுப்பார்த்து கவனிக்க ஆரம்பித்துவிட்டாள் எனக்கூறினால் கூட தவறாகாது .
ஒருநாள் தெரிந்தவர்கள் வீட்டிற்கு அவர்களை சந்திக்க போயிருந்தசமயம் , அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தவர்கள் கற்பகத்தை பற்றி கேட்க தொடங்கியவுடன் கற்பகம் தன்வேலையை கவனிக்க கிளம்பி வெளியில் போய்விட்டாள். ஆனால் அந்த மனிதர்களுக்கு கற்பகத்திடம் ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டு தன்பிள்ளைக்கு கற்பகத்தை கேட்டு மணம் முடித்த கதை மிகவும் குறுகிய காலகட்டத்தில் நல்லவிதமாக எல்லாமே நடந்து முடிந்து சந்தோஷமான நாட்களை கழிக்கும் சமயம், தனக்கென கிடைத்த சிற்பத்தை பற்றி நினைத்து , நினைத்து மகிழ்ந்திருப்பாள்.
பெரியவர்கள் கூறுவதையும் கேட்டிருக்கிறேன், நல்லவேளை என்பது வந்து வந்துவிட்டால் எந்த கெட்ட சக்தியையும் நம்மை அண்டவிடாது, என பெரியவர்கள் கூறிக்கேட்டிருக்கிறேன், நம்மை உச்சாணிக்கிளையிலும் உட்கார்த்தி விடும் என. கற்பகத்தின் கதையும் ஒரு அதிசய மாதிரி கதைதான்.
Leave A Comment