நாம் யாவருமே நமக்கு எது சரியாக தோன்றுகிறதோ அதையேதான் செய்வோம். என்னதான் பிறர் எடுத்துக்கூறினாலும் செய்ய மாட்டோம். மனித குணத்தின் சிறந்த சுபாவம், இதுவாகத்தான் இருக்கும். ஆனால் பல மனிதர்கள் பிறர் சொல்வதைக்கேட்டு ஆட்டம் போட்டுவிட்டு வேலையையும் வேலைக்குதவாமல் செய்தும் விட்டு, கவலைப்படாமல் நின்றுகொண்டிருப்பார்கள். மனித மனத்திற்கு நிரந்தரமான எண்ணங்கள், மற்றும் நிவாரணங்களும் கிடையாது. நான்கு ஆட்களை சந்தித்தால், நான்கு விதமான செயல்களில் ஈடுபட்டும், செய்தும் வருவார்கள்.ஆகையால், எல்லா பிரச்னைகளுக்கும், பரிகாரங்கள் உள்ளன. சரியாக கடைப்பிடித்து அதன்படி நடக்கவேண்டியது நம்முடைய கடமை. ஆனால், யார் மனதில் என்ன இருக்குமோ தெரியாது, வெளியில் பார்த்தும் கேட்டும்தான் நாம் கடைபிடிக்கிறோம். சில நேரங்களில் நம்முடைய நேரமும் காலமும் சரியாக இல்லாது போனாலும் நாம் எந்த பக்கம் சாய்ந்தாலும் சரிந்து விடுவோம் என்பது உண்மையே. காரணம், தீரஆலோசிக்காமல், மனதில் தோன்றியவைகளை செய்து முடிக்கும்போது, தவறான வழியில், போய் மாட்டிக்கொண்டு விடுவோம். ஆகையால் தீர ஆலோசித்து மனதை ஒரு முகமாக வைத்துக்கொண்டு  காரியத்தில் இறங்கி விடவேண்டும்.