ஒரு சிலர் மிக அழகாக பேசுவார்கள், அவர்களுடன் பேச ஆர்வமாக இருக்கும். ஆனால் அவர்கள் நம் நாறும் வாயை கிண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள். பலவிதமான யுக்திகளை கையாண்டு, சதாபிறரை பற்றியே நம் வாயை திறக்க வைத்து வேடிக்கை பிறருக்கு காண்பிப்பார்கள். நாம் பேசும்போது, அவர்கள், நம்தடுமாற்றத்தை கண்ணடித்து,  பிறருக்கு கிண்டி விட்டுக்கொண்டேயிருப்பார்கள்.  நாம் நம் பேச்சை அங்கிருப்பவர்கள் ரசித்து கேட்டுக்கொண்டிருப்பதுபோல் தோன்றியதால் , ஒரே ஆவலுடன்,   நாமும் ருசித்தும், ரசித்தும் பேசுவோம்..

நம் பின்னால், அவர்கள் நமக்கு வித, விதமான பெயர்கள் சூட்டி பேசிக்கொண்டிருப்பார்கள். வழுக்கைத் தலையுள்ளவர்களுக்கு, மகாலிங்கம், கொஞ்சம் முடிஉள்ளவர்களுக்கு ஆறுமுகம்,  கோபக்காரர்களுக்கு வெடி,  உடல் சீராக இல்லாதவர்களுக்கு அண்டா, கோணல் மாணலாக பல் உள்ளவர்களுக்கு கடலை உருண்டை, அதிகமாக பேசுபவர்களுக்கு, நான்ஸடாப், வம்பர்களுக்கு செய்தித்தாள், இப்படி பெயர்கள் சூட்டுவதில் பிள்ளைகள், ராஜாக்களே.

இன்னம் பலருக்கு அவர்கள் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தைகளை கூறி கலாட்டாவாக பேசுவார்கள்.  ஆங்கில அறிவு கொஞ்சம் உள்ளவர்களை ராபர்ட் ,ஆல்பெர்ட் , விக்டோரியா,எலிஸபெத், என்றெல்லாம் கிண்டலாக கூறுகிறார்கள். சிலர் இங்கு பேசுவதை கேட்டு வேறு எங்காவது கூறியதை நாம்  கேட்டு விட்டோமானால், நாரதமுனி, கலகப்பிரியர் என்பார்கள். உடல்கனம் அதிம் உள்ளவர்களை கண்டால் கொழுக்கட்டை என்றும், எதைக்கேட்டாலும்  திரும்ப, திரும்ப கேட்பவர்களுக்கு உடைந்த ரிகார்ட், இப்படியாக, வித,விதமான புத்தியை உடையவர்கள் எல்லாகுடும்பங்களிலும் இருந்து வருகிறார்கள்.

சண்டைக்கென்றே சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு, பிரதி வாதம் செய்ய ரெடியாகவும்  இருக்கிறார்கள். கிளப்பி விட்டு கண்ணில், மண்ணைத்தூவுவதற்கும் ரெடியாக மனிதர்கள் இருந்து கொண்டே இல்லாத  மாதிரியும் நடிக்கிறார்கள். யார் எதைப்பற்றி பேசினாலும் காமெண்ட்ஸ் அடிக்காமல் உட்கார்ந்திருப்பார்கள், ஆகையால் மிகவும் நல்லவர்கள் என நினைத்து ஏமாற வேண்டாம். வாயே திறக்காத குயுக்திகாரர்களே அவர்கள்தான்.உலகோடு ஒட்டாமல் தனியாகவே நிற்பார்கள். அவர்கள்தான் குயுக்தியை பார்த்து, கேட்டு  பிறர் வாயை கிண்டி , கிளறி விட்டு அனுபவித்து மகிழ்ந்து வாழ்வார்கள். யுக்திக்கும், குயுக்திக்கும் உள்ள வித்தியாசம் ஒரே ஒரு எழுத்துதான் , ஆனால் அர்த்தத்தை  புரிந்து கொண்டோமானால் மனதுக்கு வேதனை ஏற்படுமென்பதில் சந்தேகமேயில்லை.