நம்யாவருக்குமே ஒருவிதமான ரத்தபாசம், பந்தபாசம் பிடித்து ஆட்டிப்படைத்துக்கொண்டேயிருக்கிறது.பிள்ளைகள் என்பது ஒரு பாசக்கயிறு போல. ஏனென்றால் அதை விடவும் முடியாது, நம் மனதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும் முடிவதில்லை.ஆனாலும் நாம் பெற்ற செல்வங்கள் என்பதினால் ஒருபாசகயிற்றை போலவே இழுத்துப்பிடித்துக்கொண்டு திண்டாடுகிறோம். சில சமயங்களில் அளவிற்கு மீறி கவலைபட்டும், எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டும் தவிக்கிறோம், விடவும் முடியவில்லை, வைத்துக்கொள்ளவும் பிடிக்கவில்லை. அரைகிணறு தாண்ட நினைப்பது போல் ஒருவித உணர்வை சுமந்து கொண்டு முழிக்கிறோம்.

இன்றைய நாளில்,பிள்ளைகளுக்கு சுதந்திரமும் வேண்டியுள்ளது, அதேசமயம் ஒத்தாசைகளுக்கு உண்மைஊழியர்களும் அவசியமே. கூலிக்கார்ர்களைவிட பெற்றவர்களை  எத்தனையோ விதங்களில்  நம்பலாம் என்பது ஒருபக்கமிருக்க, உண்மை ஊழியர்களாகவும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு.’ பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம்கல்லு’என்றதொரு  பழமொழி உண்டு. நம் பெரியவர்கள் எத்தனை கடினமான சமயங்களை எதிர்நோக்கியிருந்தால் உயர்வான வார்த்தைகளை உபயோகித்து இம்மாதிரியானவாக்கியங்களை உருவாக்கியிருப்பார்கள்? யோசிக்கவேண்டிய விஷயமே. ஆனால் மனித ஆத்மாக்களுக்கு எத்தனை செய்து கொடுத்தாலும்மனதிருப்தி ஏற்படுவதேயில்லை.இதுவே ஒரு சாபம்தான்.

மனிதர்களாக பிறந்துள்ள நாம் யாவருக்குமே எத்தனையோ எதிர்பார்ப்புகள் இருந்துவருகின்றன. எதிலிருந்து, யாரிடமிருந்து, எப்போது கிடைக்கும் என்றுதான் தெரிவதில்லை.ஆனால் எந்த உயர்வான உண்மையான வார்த்தைகளையும், சரியான சந்தர்ப்பத்தில் உபயோகிக்கத்தெரியாமல் காலத்தை கடத்துகிறோம். மனிதர்களுக்கு மனோசக்திதான் அவசியமாக தேவைப்படுகிறது. உடல் எந்த நிமிடமும்  மறைந்துவிடலாம். மனம் என்பது அத்தனை சுலபத்தில் அழியாது. இந்த பாழும் மனதிற்கு திருப்தி என்பதே கிடையாது. மனம் வேறு எதையோ எதிர்பார்க்கிறது, நாம் செய்வதில் குறைகள் காண ஆட்கள் காத்திருப்பார்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக நம்புகிறேன்,மனிதர்களுக்கு வயதுதான் முதிர்கிறதே தவிர எந்தவிதமான துர்குணங்கள் வயதானபின்பும்,குறைவதேயில்லை. முப்பது வயதில் வராத முதிர்ச்சி முன்னூறு வயதானாலும் வராது என்பதுதான் உண்மை.

அனாதை விடுதிகள், பெண்கள் ஹாஸ்டல் என்று  இருப்பது போல, இன்றைக்கு பல முதியோர் இல்லங்கள் முழங்கிகொண்டு கிளம்பி விட்டன.எங்களை ஹாஸ்டலில் சேர்த்த நாளை மறக்க முடியாது என்கிறமாதிரி உள்ளது.ஆனால் பெற்றோர்கள் நாங்கள் இந்த விசேஷத்திறகாக ஒரு வாரம்தான் லீவு கூறியுள்ளோம் என பிள்ளைகளிடம் கூறிவிட்டு கிளம்பும்சமயம் பழையகால ஞாபகம் வந்து கண் முன்னே கூத்தாடுகிறது.